ஆன்மிகம்
தொழுகை

மசூதிகளில் இரவு 10 மணி வரை தொழுகை நடத்த இஸ்லாமியர்கள் கோரிக்கை

Published On 2021-04-10 02:56 GMT   |   Update On 2021-04-10 02:56 GMT
ரம்ஜான் மாதம் இஸ்லாமியர்களுக்கு அதிகப்படியான இறைவழிபாடு செய்வதிலும், குர்ஆன் ஓதுவதிலும், ஏழைகளுக்கு ஜகாத் என்னும் நன்கொடை வழங்குவதிலும், வழக்கமாக செய்து வரும் முக்கிய கடமையாகும் இந்த மாதத்தில் மட்டும் தான் சிறப்பு தொழுகைகள் செய்வது வழக்கம்.
குடியாத்தம் இஸ்லாமியர்கள் மற்றும் அனைத்து ஜமாத் சார்பாக நேற்று குடியாத்தம் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நேர்முக உதவியாளர் சரவணனிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:-

ரம்ஜான் மாதம் வருகிற 13-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 12-ந் தேதி முடிவடைகிறது. இந்த மாதம் இஸ்லாமியர்களுக்கு அதிகப்படியான இறைவழிபாடு செய்வதிலும், குர்ஆன் ஓதுவதிலும், ஏழைகளுக்கு ஜகாத் என்னும் நன்கொடை வழங்குவதிலும், வழக்கமாக செய்து வரும் முக்கிய கடமையாகும் இந்த மாதத்தில் மட்டும் தான் சிறப்பு தொழுகைகள் செய்வது வழக்கம்.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக அனைத்து வழிபாட்டுதலங்களும் மூடப்பட்டதால் இறைவழிபாடு செய்வதில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானோம். அதேபோல் இந்த ஆண்டும் இரவு 8 மணிக்கு அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட வேண்டும் என்ற அரசின் முடிவு இஸ்லாமிய மக்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரசின் அனைத்து கட்டுப்பாடுகளுக்கும் கட்டுபடுகிறோம். நாங்கள் மசூதியில் இரவு 10 மணி வரை தொழுகை நடத்துவதற்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அரசு அறிவித்துள்ள சமூக இடைவெளியையும், முக கவசம் அணிந்து மற்றும் விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிப்போம் என உறுதி அளிக்கிறோம் எனவே எங்களுடைய மத நம்பிக்கையின்படி இறைவழிபாடு செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News