ஆன்மிகம்

திருவிடைமருதூர் கோவிலில் தோஷங்களை போக்க சிறப்பு பூஜை

Published On 2019-03-16 07:58 GMT   |   Update On 2019-03-16 07:58 GMT
திருவிடைமருதூர் மகாலிங்கம் சுவாமி ஆலயத்தில் தோஷங்களை விரட்டுவதற்காக தினமும் காலை சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.
சந்திரன், குருவான பிரகஸ்பதியின் மனைவி மீது ஆசை கொண்டதால் தோஷத்திற்கு ஆளானான். தோஷம் நீங்க, சிவனை வேண்டி தவமிருந்தான். இரங்கிய சிவன் விமோசனம் அளித்தார். சந்திரன் வந்தபோது அவனது மனைவியர்களான 27 நட்சத்திரங்களும் வந்தன.

சந்திரனுக்கு அருளிய சிவன், நட்சத்திரங்களுக்கும் அருள்புரிந்தார். திருவிடைமருதூரில் தோன்றிய 27 லிங்கங்களில் அவை ஐக்கியமாகின. இந்த லிங்கங்கள் ஒரே சந்நிதியில் உள்ளன. அவரவர் பிறந்த நட்சத்திர லிங்கத்தில் விளக்கேற்றி வழிபடலாம். சந்திரனின் தோஷம் நீங்கியதால் திருவிடைமருதூர் தலத்துக்கு “சந்திர தலம்” என்ற சிறப்பும் உண்டு.

திருவிடை மருதூர் மகாலிங்கம் சுவாமி ஆலயத்தில் தோஷங்களை விரட்டுவதற்காக தினமும் காலை சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. இதற்காக தேவேந்திரன் நந்தி அமைந்துள்ள பகுதிக்கும், பிரம்மகத்தி சன்னதிக்கு இடையே வசதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அமர சிறு பலகைகள் போட்டு இந்த பூஜை நடத்துகிறார்கள்.

தினமும் காலை 7 மணி, 8 மணி, 9 மணி என மூன்று தடவையாக தோஷ நிவர்த்தி பூஜை நடத்தப்படுகிறது. தினமும் பக்தர்கள் இதில் கலந்து கொண்டு தோஷ நிவர்ததி செய்து கொள்கிறார்கள். சிறப்பு மற்றும் பண்டிகை நாட்களில் இந்த தோஷ நிவர்த்தி பூஜை நேரம் மாறுதலுக்கு உட்பட்டது. எனவே ஆலயத்தில் தொடர்பு கொண்டு உறுதி செய்துகொள்ளுங்கள்.

Tags:    

Similar News