ஆன்மிகம்

நவக்கிரக பிரச்சினைகள் தீர்க்கும் சக்கரத்தாழ்வார் வழிபாடு

Published On 2018-07-18 09:06 GMT   |   Update On 2018-07-18 09:06 GMT
கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை ஸ்ரீரங்கநாதர் கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வாரை வழிபட்டால் நவக்கிரகங்களால் ஏற்படும் துன்பங்கள் எல்லாம் நீங்கும்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை ஸ்ரீரங்கநாதர் கோவிலில் ஸ்ரீசக்கரத்தாழ்வார்க்கென்று தனி சந்நதி உள்ளது. திருமாலின் பஞ்ச ஆயுதங்களில் ஒன்றான ஸ்ரீசுதர்ன சக்கரத்தின் அம்சமான ஸ்ரீசக்கரத்தாழ்வார் 16 விதமான ஆயுதங்களை 16 கைகளில் தாங்கி வீறுகொண்டு எழும் தோற்றத்துடன் ஆறுகோண சக்கரத்தில் பின்பக்கத்தில் யோக நரசிம்மராகவும், முன்பக்கத்தில் ஸ்ரீசக்கரத்தாழ்வாராகவும் எழுந்தருளி உள்ளார்.

இங்கு பெருமாளுக்கு செய்யப்படும் அனைத்து வழிபாடுகளும் சக்கரத்தாழ்வாருக்கு செய்யப்படுகிறது. இவரை வழிபடும் பக்தர்களின் பாவங்கள் நீங்கி புண்ணியம் கிட்டும் என்பது ஐதீகம். சங்கடங்களை தீர்க்கும் சக்கரத்தாழ்வாரை வழிபட பக்தர்கள் ஓடி எடுத்து வைத்தால், அவர் இரண்டடி முன் வைத்து பிரச்சினைகளையும் துன்பங்களையும் தீர்த்து சந்தோஷத்தில் ஆழ்த்துவார் என்பது விதி.

சக்கரத்தாழ்வாரை வழிபட்டால் நவக்கிரகங்களால் ஏற்படும் துன்பங்கள் எல்லாம் நீங்கும். இங்கு நெய் விளக்கு ஏற்ற ஓம் நமோ பகவதே மகா எதிர்னாய நம என வழிபட்டால் கூடுதல் பலன் கிட்டும் என்பது ஐதீகம்.

ஸ்ரீசக்கரத்தாழ்வாரின் நாளான வியாழன் அன்று சிவப்பு, மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால் நினைத்த நல்ல காரியங்களில் வெற்றி கிட்டும், வாழ்வில் சுபீட்சம் காணலாம். திருமணம் ஆகாத கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். சுமங்கலிகள் சுகமாக வாழ்வர் என்பது ஐதீகம்.

புதன், சனிக்கிழமைகளில் துளசி சாற்றி துளசியால் அர்ச்சனை செய்து 12, 24, 48 முறை வலம் வந்து வழிபட்டால், பிரார்த்தனை வேண்டுதல்கள் நிறைவேறும். இங்கு கிருத்திகை தோறும் நடைபெறும் சுதர்சன ஹோமத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வேண்டுதல் நிறைவேற வழிபாடு செய்கின்றனர். 
Tags:    

Similar News