ஆன்மிகம்

நாகதோஷம் போக்கும் அர்த்தநாரீஸ்வரர்

Published On 2018-05-16 05:03 GMT   |   Update On 2018-05-16 05:03 GMT
திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற கொங்கு நாட்டுச் சிவதலமான திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் நாகதோஷத்திற்கு சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது.
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில், திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற கொங்கு நாட்டுச் சிவதலமாகும். இந்த கோவிலில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் சன்னிதியின் முன் மண்டபத்தில் ஆமை மண்டபம் ஒன்று உள்ளது.

இக்கோவிலின் தூண்கள், மண்டபச் சுவர்கள்என அனைத்துப் பகுதிகளும் அழகிய சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. படிக்கட்டுகள் வழியே மலைக்குச் செல்லும் வழியில், பாறையில் செதுக்கப்பட்டுள்ள நாகர் சன்னிதி மிகவும் பிரசித்தி பெற்றது. நாக தோஷங்கள் நீங்குவதற்காக இங்கு பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள்.

அர்த்தநாரீஸ்வரர் கோவில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில் மலையின் மீதுள்ளது. இக்கோவில் ஈரோட்டிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும், சேலத்திலிருந்து 45 கி.மீ.தொலைவிலும் அமைந்துள்ளது. மலையின் அடிவாரத்தில் திருச்செங்கோடு கயிலாசநாதர் கோவில் உள்ளது. 
Tags:    

Similar News