ஆன்மிகம்
பூண்டி மாதா பேராலயம்

பூண்டி மாதா பேராலயத்தில் திருப்பலி: குறைந்த அளவிலான பக்தர்கள் பங்கேற்பு

Published On 2020-09-02 11:56 IST   |   Update On 2020-09-02 11:56:00 IST
தஞ்சை மாவட்டம் பூண்டியில் பிரசித்தி பெற்ற பூண்டி மாதா பேராலய திருப்பலியில் குறைந்த அளவிலான பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்து கொண்டனர்.
தஞ்சை மாவட்டம் பூண்டியில் பிரசித்தி பெற்ற பூண்டி மாதா பேராலயம் உள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இந்த பேராலயம் மூடப்பட்டது. கடந்த மே மாதம் நடைபெற வேண்டிய பூண்டி மாதா பேராலய திருவிழாவும் நடைபெறவில்லை.

ஆண்டு தோறும் நடைபெறும் புனித கன்னி மரியாள் பிறப்பு பெருவிழா கொடியேற்றம் பக்தர்கள் இல்லாமல் கடந்த 30-ந் தேதி நடைபெற்றது. தற்போது ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டு வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி நேற்று பேராலயம் திறக்கப்பட்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக பேராலய வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பேராலயத்துக்குள் வருபவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. திருப்பலியை பேராலய அதிபர் பாக்கியசாமி நடத்தி வைத்தார். இதில் குறைந்த அளவிலான பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்து கொண்டனர்.

Similar News