ஆன்மிகம்
வீட்டிலேயே பிரார்த்தனையில் ஈடுபட்ட கிறிஸ்தவர்கள்

தேவாலயங்களில் வழிபாட்டுக்கு தடை: வீட்டிலேயே பிரார்த்தனையில் ஈடுபட்ட கிறிஸ்தவர்கள்

Published On 2020-03-31 09:37 IST   |   Update On 2020-03-31 09:37:00 IST
தேவாலயங்களில் நடந்த திருப்பலி நிகழ்வுகள் பல்வேறு தனியார் சேனல்களில் ஒளிபரப்பானது. அதனை பார்த்து கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கோவில்கள், தேவாலயங்களில் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவில்கள் மூடப்பட்டாலும், ஆகம விதிகளின்படி பூஜைகள் வழக்கம்போல நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தேவாலயங்களிலும் வழக்கமான பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது.

புகழ்பெற்ற நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி தேவாலயத்தில் பக்தர்கள் வராவிட்டாலும், திருப்பலி நிகழ்வுகள் வழக்கம்போல நடைபெற்று வருகிறது. தவக்காலத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை திருப்பலி மிகவும் விசேஷமானது ஆகும்.

தேவாலயங்களில் சென்று வழிபட முடியாத கிறிஸ்தவர்கள், தங்கள் வீடுகளிலேயே நேற்று தொலைக்காட்சி வழியாக திருப்பலி நிகழ்வுகளை கண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். சில தனியார் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட இந்த திருப்பலி நிகழ்வுகளை பார்த்து மனம் உருக கிறிஸ்தவர்கள் வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டதை பார்க்க முடிந்தது.

இதேபோல கத்தோலிக்க தேவாலயங்களில் நடந்த திருப்பலி நிகழ்வுகள் பல்வேறு தனியார் சேனல்களில் நேற்று ஒளிபரப்பானது. அதனை பார்த்து கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

Similar News