ஆன்மிகம்
திசையன்விளை உலக ரட்சகர் ஆலய திருவிழாவில் சிறப்பு ஆராதனை நடந்ததை படத்தில் காணலாம்.

திசையன்விளை உலக ரட்சகர் ஆலய திருவிழா சிறப்பு ஆராதனை

Published On 2020-10-05 03:01 GMT   |   Update On 2020-10-05 03:01 GMT
திசையன்விளை உலக ரட்சகர் ஆலய திருவிழா சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
தென்மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள உலக ரட்சகர் ஆலயமும் ஒன்றாகும். இந்த ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு ஆலயத்தின் 136-ம் ஆண்டு திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதைத்தொடர்ந்து தினமும் திருப்பலி, ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடந்து வந்தது. 8-ம் திருவிழாவான நேற்று முன்தினம் நற்கருணை பவனி, குணமளிக்கும் ஜெப வழிபாடு நடைபெற்றது.

9-ம் திருவிழாவான நேற்று திருவிழா சிறப்பு மாலை ஆராதனை நடந்தது. தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம் அடிகளார் ஆராதனையை நடத்தினார். இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டனர். தொடர்ந்து சப்பர பவனி நடைபெற்றது.

விழாவில் பங்குதந்தைகள் நார்பட்தாமஸ், ஜான்பிரிட்டோ, நெல்சன் பால்ராஜ், லியோன், ஜோசப் ரவிபாலன், சகாயராஜ், விஜயன் அந்தோணி, டொமினிக் அருள்வளவன், வசந்தன், விக்டர், இளங்குமரன், செல்வரத்தினம், தனிஸ்லாஸ், டன்ஸ்டன், இன்னாசிமுத்து, செல்வமணி, அருள்மணி, இருதயராஜ், டென்சில், பென்சிகர்அமல், நெல்சன், பிரைட்மச்சாது, அந்தோணிராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவையொட்டி, ஆலயம் முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. விழா ஏற்பாடுகளை பங்குதந்தை கிறிஸ்டியான், பங்கு மேய்ப்பு பணிக்குழு, அருட்சகோதரிகள், அன்பியங்கள், பக்தசபைகள் மற்றும் இறைமக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News