ஆன்மிகம்
புனித பிரான்சிஸ் அசிசியார்

மார்த்தால் புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது

Published On 2020-10-01 07:48 GMT   |   Update On 2020-10-01 07:48 GMT
பூதப்பாண்டியை அடுத்த திட்டுவிளை மார்த்தால் புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
பூதப்பாண்டியை அடுத்த திட்டுவிளை மார்த்தால் புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. திருவிழா நாட்களில் முதல் நாளன்று மாலை 6 மணிக்கு இறச்சகுளம் பங்குத்தந்தை பேட்ரிக் சேவியர் தலைமையில் கொடியேற்றமும், திருப்பலியும் நடக்கிறது.

புதுக்குடியிருப்பு பங்குத்தந்தை ஜெயச்சந்திரன் ரூபன் மறையுரையாற்றுகிறார். விழாவின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 8 மணிக்கு தடிக்காரன்கோணம் மனுவேல் பன்னீர்செல்வம் தலைமையில் திருப்பலி, மறையுரை நடக்கிறது.

மாலை 6.30 மணிக்கு கொடியேற்றம் மற்றும் நற்கருணை ஆசீர் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை மரியதாஸ், அருட்பணி சஜு, அருட்சகோதரிகள், பங்கு அருட்பணி பேரவையினர் மற்றும் பங்கு இறைமக்கள் செய்துள்ளனர்.
Tags:    

Similar News