மயிலாடி புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 29-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை 3 நாட்கள் நடக்கிறது.
28-ந் தேதி மாலை 5.30 மணிக்கு ஜெபமாலையும், தொடர்ந்து தென்தாமரைகுளம் பங்குத்தந்தை ஜெரி வின்சென்ட் தலைமையில் திருப்பலியும் நடக்கிறது. 29-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, கோட்டார் மறைவட்ட முதன்மைக்குரு மைக்கிள் ஏஞ்சல் தலைமையில் திருவிழா திருப்பலி ஆகியவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஆன்றனி பென்சிகர், பங்கு பேரவையினர் மற்றும் பங்குமக்கள் செய்து உள்ளனர்.