ஆன்மிகம்
தூய மிக்கேல் அதிதூதர்

தென்காசி தூய மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா தொடங்கியது

Published On 2020-09-21 09:06 IST   |   Update On 2020-09-21 09:06:00 IST
தென்காசி தூய மிக்கேல் அதிதூதர் ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 27-ந்தேதி நற்கருணை பவனியும், 28-ந்தேதி சப்பர பவனியும் ஆலய வளாகத்திலேயே நடைபெறுகிறது.
தென்காசியில் பிரசித்தி பெற்ற தூய மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் பெருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதி மட்டுமல்லாமல், கேரளாவில் இருந்தும் ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து கலந்து கொள்வார்கள்.

இந்த ஆண்டுக்கான விழா நேற்று மாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 27-ந்தேதி நற்கருணை பவனியும், 28-ந்தேதி சப்பர பவனியும் ஆலய வளாகத்திலேயே நடைபெறுகிறது.

தற்போது கொரோனா காரணமாக வழிபாடுகள் சமூக இடைவெளியில் நடைபெறுகிறது. பக்தர்கள் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. ஆலயத்திற்குள் வரும் பக்தர்களின் வெப்பநிலையும், ஆக்ஸிஜன் அளவும் பரிசோதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உடல்நலம் குறைந்தவர்கள் ஆலயத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும்.

அரசு மற்றும் பாளையங்கோட்டை மறைமாவட்டம் வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகள்படி, விழா நடைபெறும். இந்த ஆண்டு குறைவான பக்தர்களே அனுமதிக்கப்படுவார்கள் என ஆலய நிர்வாகத்தினர் கூறினர். ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை போஸ்கோ குணசீலன், உதவி பங்குத்தந்தை செல்வ தயாளன், பங்கு பேரவையினர் செய்து வருகிறார்கள்.

Similar News