ஆன்மிகம்
தூய மரியன்னை பேராலய திருவிழா தொடக்க நிகழ்ச்சியில் ஆயர் ஜெரோம் தாஸ் கலந்து கொண்டதை படத்தில் காணலாம்.

முளகுமூடு தூய மரியன்னை பேராலய திருவிழா தொடங்கியது

Published On 2020-09-05 04:30 GMT   |   Update On 2020-09-05 04:30 GMT
முளகுமூடு தூய மரியன்னை பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 13-ந் தேதி வரை 10 நாட்கள் அரசின் வழிகாட்டுதலின்படி நடக்கிறது.
அழகியமண்டபம் அருகே முளகுமூட்டில் தூய மரியன்னை பேராலயம் உள்ளது. இதை பேராலயமாக போப் ஆண்டவரால் அறிவிக்கப்பட்டு முதல் திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. குழித்துறை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜெரோம் தாஸ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினரான மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் முன்னிலை வகித்தார். பங்குத்தந்தை டோமினிக் எம்.கே. தாஸ் கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து திருப்பலி நடைபெற்றது.

விழா வருகிற 13-ந் தேதி வரை 10 நாட்கள் அரசின் வழிகாட்டுதலின்படி நடக்கிறது. திருவிழா நாட்களிலும் மாலையில் ஜெபமாலை, திருப்பலி நடைபெறும். 9-ந் தேதி மாலையில் திருப்பலியை தொடர்ந்தும், 12-ந் தேதி இரவு 9 மணிக்கும் தேர்பவனி நடைபெறும்.

திருவிழாவின் இறுதி நாளான 13-ந் தேதி காலையில் திருவிழா திருப்பலியும், தொடர்ந்து ஆலய வளாகத்துக்குள் தேர்பவனியும் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை பங்குதந்தை டோமினிக் எம்.கே. தாஸ், இணைபங்கு தந்தை தாமஸ், இல்ல பணியாளர்கள் ஜெலஸ்டின், ஜெரால்ட் ஜோஸ், ராபின்சன், ஆண்டனி, பங்குபேரவை துணை தலைவர் வின்சென்ட் ராஜ், செயலாளர் விஜி மொன்மணி, பொருளாளர் விஜி கலா, துணை செயலாளர் ஹெலன் மேரி மற்றும் பேராலய பங்கு மக்கள், அருட்சகோதரிகள் இணைந்து செய்துள்ளனர்.
Tags:    

Similar News