ஆன்மிகம்
இயேசு

உண்மையான கைமாறு

Published On 2020-08-25 08:38 GMT   |   Update On 2020-08-25 08:38 GMT
விருந்து அளிக்கும்போது, ஏழைகளையும் உடல் ஊனமுற்றவர்களையும், கால் ஊனமுற்றவர்களையும், பார்வையற்றவர்களையுமே அழையுங்கள்; அப்போது சந்தோஷப்படுவீர்கள்.
யூத அதிகார வர்க்கத்தில் முதன்மை பெற்றிருந்த பரிசேயர்களின் தலைவர் ஒருவனுடைய வீட்டிற்கு விருந்து சாப்பிடச் சென்றிருந்தார் இயேசு. விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் அடித்துப்பிடித்து முதன்மையான இடங்களைத் தேர்ந்தெடுப்பதை இயேசு கவனித்தார். அப்போது அவர்களுக்கு ஓர் உவமையைச் சொன்னார்:

“யாராவது உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், முதன்மையான இடத்தில் போய் உட்காராதீர்கள். ஏனென்றால், உங்களைவிட மதிப்புமிக்க நபரும் அழைக்கப்பட்டிருக்கலாம். உங்களையும் அவரையும் அழைத்தவர் உங்களிடம் வந்து, ‘இவருக்கு இந்த இடத்தை விட்டுக் கொடுங்கள்’ என்று கேட்பார். அப்போது, நீங்கள் வெட்கத்தோடு கூனிக் குறுகி கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும். எனவே நீங்கள் அழைக்கப்பட்டிருந்தால், கடைசி இடத்தில் போய் உட்காருங்கள்; அப்போது உங்களை அழைத்தவர் வந்து, ‘நண்பரே, முதன்மையான இடத்தில் போய் உட்காருங்கள்’ என்று சொல்வார். அப்போது, மற்ற விருந்தினர்கள் முன் உங்களுக்குக் கவுரவமாக இருக்கும். தன்னைத் தான் உயர்த்துகிற எவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தான் தாழ்த்துகிற எவனும் உயர்த்தப்படுவான்” (லூக்கா 14:8-11) என்றார்.

பிறகு, தன்னை விருந்துக்கு அழைத்த பரிசேயர் தலைவனைக் கனிவுடன் அருகில் அழைத்த அவர், “நீங்கள் விருந்தை அளிக்கும்போது, உங்கள் நண்பர்களையோ, சகோதரர்களையோ, உறவினர்களையோ, அக்கம் பக்கத்திலுள்ள பணக்காரர்களையோ அழைக்க வேண்டாம். அப்படி அழைத்தால் ஒருவேளை பதிலுக்கு அவர்களும் உங்களை எப்போதாவது அழைக்கலாம்.

அது உங்களுக்குச் செய்யப்படுகிற கைமாறாகிவிடும். அதனால் விருந்து அளிக்கும்போது, ஏழைகளையும் உடல் ஊனமுற்றவர்களையும், கால் ஊனமுற்றவர்களையும், பார்வையற்றவர்களையுமே அழையுங்கள்; அப்போது சந்தோஷப்படுவீர்கள். ஏனென்றால், உங்களுக்குக் கைமாறு செய்ய அவர்களிடம் ஒன்றும் இருக்காது. ஆனால், நீதிமான்களுடைய உயிர்த்தெழுதலின்போது உங்களுக்குக் கைமாறு கிடைக்கும்” (லூக்கா 15:12-14 ) என்றார்.

“உளப்பூர்வமான அழைப்பை நிராகரித்த எவரும் நான் அளிக்கிற விருந்தைச் சாப்பிடப்போவதில்லை என்று நான் உங்கள் எல்லாருக்கும் சொல்கிறேன்” என்றார் இயேசு.
Tags:    

Similar News