ஆன்மிகம்
காரைக்காலில் புனித தேற்றரவு அன்னை ஆலய ஆண்டு திருவிழா

காரைக்காலில் புனித தேற்றரவு அன்னை ஆலய ஆண்டு திருவிழா

Published On 2020-08-08 08:22 GMT   |   Update On 2020-08-08 08:22 GMT
காரைக்காலில் உள்ள 134 ஆண்டுகள் பழமை வாய்ந்த தூய தேற்றரவு அன்னை ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காரைக்கால் மாதா கோவில் வீதியில் 134 ஆண்டுகள் பழமைவாய்ந்த தூய தேற்றரவு அன்னை ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் திருவிழா சிறப்பாக நடைபெறும். அதன்படி நேற்று மாலை ஆண்டு திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெற்றது.

முன்னதாக, ஆலயத்தில் இருந்து மந்திரித்து எடுத்துவரப்பட்ட மாதா கொடியை மாவட்ட முதன்மை பங்குத்தந்தை அந்தோணிராஜ் ஏற்றி வைத்தார். விழாவில் தினமும் காலை, மாலை திருப்பலியும், மாலை 5.30 மணிக்கு சிறிய தேர்பவனியும் நடக்கிறது. 10-ம் நாள் நிகழ்ச்சியாக, ஆகஸ்டு 15-ந் தேதி மாலை 5 மணிக்கு சிறப்பு திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலியும், அதனை தொடர்ந்து சிறப்பு மின் அலங்கார தேர்பவனியும் ஆலயம் வெளிபிரகாரத்தில் நடக்கிறது.
Tags:    

Similar News