ஆன்மிகம்
இயேசு

வேதமே என் மன மகிழ்ச்சி

Published On 2020-07-17 09:16 GMT   |   Update On 2020-07-17 09:16 GMT
நம்முடைய வாழ்க்கையில் மனமகிழ்ச்சியாய் இருப்பதற்கு நமக்கு தேவன் கொடுத்த ஒரு பொக்கிஷம் வேதாகமம். எப்படி இந்த வேதாகமத்தின் மூலம் மனமகிழ்ச்சியாய் இருப்பது? என்று சற்று சிந்தித்து பார்ப்போம்.
நம்முடைய வாழ்க்கையில் மனமகிழ்ச்சியாய் இருப்பதற்கு நமக்கு தேவன் கொடுத்த ஒரு பொக்கிஷம் வேதாகமம். எப்படி இந்த வேதாகமத்தின் மூலம் மனமகிழ்ச்சியாய் இருப்பது? என்று சற்று சிந்தித்து பார்ப்போம்.

நன்றாக படிக்கும் ஒரு சகோதரி கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது திடீரென வியாதிப்பட்டு விட்டார். இதனால் சில மாதங்கள் கல்லூரிக்கு செல்லவில்லை என்பதால் தேர்வுக்கு சரியாக ஆயத்தமாக முடியவில்லை. அந்த சகோதரியின் சக மாணவர்கள், பேராசிரியர்கள் கூட ‘இனி இந்த சகோதரியால் சரியாக படிக்க முடியாது’ என்று முடிவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டாள்.

இந்த நிலையில் காணப்பட்ட அந்த சகோதரிக்கு வேதத்தில் உள்ள வசனங்கள் ஞாபகத்திற்கு வந்தது. உடனே வேதாகமத்தை எடுத்து சங்கீதம் 119-ம் அதிகாரம் மற்றும் ஏரேமியா 15-ம் அதிகாரங்களை வாசிக்க தொடங்கி உள்ளாள். இப்படி வேதத்தை படிக்க தொடங்கியவுடன் அவளுக்கு மீண்டும் புதுப்பெலன் அடைந்து நமக்கு இனி கவலை இல்லை என்று மனமகிழ்ச்சியாய் காணப்பட்டாள்.

பின்னர் வாசித்த அந்த வேதாகமத்தில் இருந்து ‘உமது வேதம் என் மன மகிழ்ச்சியாயிராதிருந்தால் என் துக்கத்திலே அழிந்து போயிருப்பேன்’ (சங்:119-92), உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன், உம்முடைய வார்த்தைகள் எனக்கு சந்தோஷமும், என் இருதயத்திற்கு மன மகிழ்ச்சியுமாயிருந்தது (ஏரே:15-16) என்ற வசனங்களை வைத்து தேவனிடத்தில் ஜெபிக்க ஆரம்பித்தாள். இப்படி ஜெபித்து விட்டு நல்ல பெலனோடு திரும்பவும் கல்லூரிக்கு சென்றாள். அந்த கல்லூரியில் நடைபெற்ற ஓர் முக்கிய போட்டியில் பல்கலைக்கழகமே வியக்கத்தக்க அளவிற்கு முதல் மாணவியாய் தேர்ந்தெடுக்கப்பட்டாள்.

ஆம் தேவ பிள்ளைகளே நீங்கள் மாணவ- மாணவிகளானாலும் சரி, பல்வேறு வேலை செய்பவர்களானாலும் சரி மனமகிழ்ச்சி இல்லாமல் அடுத்தவர்கள் இனி இவன் வேலைக்கு ஆகமாட்டான் என்று ஒதுக்கப்பட்டவர்களாய் இருக்கிறீர்களா? இப்போதே தேவன் நமக்கு கொடுத்த வேதாகமத்தை எடுத்துக் கொண்டு தேவனே உமது வேதத்தை நேசிக்கவும், அதன் மூலம் நிறைவான மன மகிழ்ச்சியை பெற்றுக்கொள்ளவும் எனக்கு உதவி செய்யும் என்று ஜெபம் செய்யுங்கள். நிச்சயமாக உங்கள் வாழ்க்கையிலும் வியக்கத்தக்க அற்புதங்களை செய்வார். ஆமென்.

சகோ.ஜேக்கப், கல்லம்பாளையம், திருப்பூர்
Tags:    

Similar News