ஆன்மிகம்
இயேசு

நகைச்சுவை உணர்வை வளர்த்திடுவோம்

Published On 2020-06-20 09:31 GMT   |   Update On 2020-06-20 09:31 GMT
மிக கடினமான சூழல்களை கூட இயல்வாக எதிர்கொள்வதற்கு நகைக்சுவை உணர்வு அடிப்படையானது என்பதை உணர்ந்திடுவோம். நம்மால் முடிந்த அளவுக்கு பிறரை மகிழ்ச்சிப்படுத்தி அதன் வழியாக நல்சமுதாயத்தினை அமைத்திடுவோம்.
மொழிக்கு முன்னதாக மனிதம் கட்டுபிடித்த முதல் தொடர்பு ஊடகம் சிரிப்பு. அகில உலகத்துக்கு பொதுவான மொழி இது. பார்வையற்ற கேட்கும் திறன் இல்லாத குழந்தைகள் சுட பிறந்த சில நாட்களில் சிரிக்கும் என்பதே சிரிப்பின் தனித்தன்மை ஆகும். சிரிக்கிற மனிதனே, சிறப்போடு அகிலத்தில் வாழ்கின்றான். யாவருக்கும் பயன்படுகிற சமுதாயத்தை கட்டமைக்கிறான். நகைச்சுவை உணர்வு கொண்ட மனிதர்கள், வாழ்வின் எத்தகைய செயல்களையும் மிக இயல்பாக கையாள்கிற அணுகுமுறையினை முழுதாய் பெற்று இருக்கின்றனர். துன்பங்கள், நெருக்கடிகள் போன்ற எது அவர்களை தாக்கினாலும் துவண்டு போய் தடுமாறி கீழே விழுந்து விடுவதில்லை. பிறருடைய கேலி, கிண்டல்களையும் பெரிதாக எடுத்திட மாட்டார்கள்.

இயல்பாகவே மிக நெருக்கமான மனிதர்களோடு மட்டும் தான் கேலி, கிண்டல் செய்ய முடியும். அப்போது கேலி, கிண்டல் எவ்விதத்திலும் அம்மனிதனை பாதிக்காது. நம்மீது உள்ள அக்கறையினாலும், அன்பினாலும் தான் கேலி, கிண்டல் செய்கின்றனர் என்பர். ஆனால் நகைச்சுவை உணர்வு இல்லாதவர்கள், எதற்கெடுத்தாலும் கோபப்படுகிறவர்களாகவே இருப்பர். சின்ன சின்ன செயலை கூட மிகப்பெரிய பிரச்சனையாகவே மாற்றி விடுவர். கேலி செய்கிற மனிதர்களுடன் நாம் சேர்ந்து வாழ பழகி விட்டால் எல்லாம் நல்லதாகவே தெரியும். நகைச்சுவை உணர்வு மனிதனுக்கு தேவையான அடிப்படை உணர்வு. இது உள்ள ஆரோக்கியத்திற்கு மட்டும் அல்லாமல் உடல் ஆரோக்கியத்துக்கும் மிக மிக அவசியமானதாகும். ஒரு குழந்தை சராசரியாக தினசரி 400 முறை சிரிக்கிறதாம். தினமும் குறைந்தபட்சம் 30 முறையாவது ஒரு மனிதன் சிரிக்க வேண்டும் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இறையருளின் காலமாகிய இத்தவக்காலத்தில் ஆக்கப்பூர்வமான மனநிலையோடு தொடர்ந்து வளர நகைக்சுவை உணர்வினை நம்மில் வளர்த்திடுவோம். மிக கடினமான சூழல்களை கூட இயல்வாக எதிர்கொள்வதற்கு நகைக்சுவை உணர்வு அடிப்படையானது என்பதை உணர்ந்திடுவோம். நம்மால் முடிந்த அளவுக்கு பிறரை மகிழ்ச்சிப்படுத்தி அதன் வழியாக நல்சமுதாயத்தினை அமைத்திடுவோம்.

அருட்பணியாளர் குருசு கார்மல்,
கோட்டார் மறை மாவட்டம். 
Tags:    

Similar News