ஆன்மிகம்
இயேசு

இயேசுவின் சோதனைகள் பற்றிய இறையியல் விளக்கங்கள்

Published On 2020-06-16 09:20 GMT   |   Update On 2020-06-16 09:20 GMT
இயேசுவுக்கு ஏற்பட்ட சோதனைகள் எந்த நோக்கத்திற்காக, குறிக்கோளுக்காக அவருக்கு ஏற்பட்டன என்ற கேள்விக்குப் பதில் பல விதங்களில் பல காலங்களில் தரப்பட்டுள்ளது.
இயேசுவுக்கு ஏற்பட்ட சோதனைகள் எந்த நோக்கத்திற்காக, குறிக்கோளுக்காக அவருக்கு ஏற்பட்டன என்ற கேள்விக்குப் பதில் பல விதங்களில் பல காலங்களில் தரப்பட்டுள்ளது. மரபு வழி விளக்கம் இது: மூன்று சோதனைகள் வழியாக இயேசு மூன்று பாவங்களுக்கு உட்படுமாறு சோதிக்கப்பட்டார். ஆனால், அவர் தம்மைச் சோதித்த அலகையை முறியடித்து, சோதனைகளை வென்றார். அந்த மூன்று சோதனனைகள் இவை:

அகங்காரம் என்னும் பாவம்: இயேசு உச்சியிலிருந்து குதித்தால் அவர் கீழே விழுந்துவிடாமல் கடவுளின் தூதர்கள் அவரைக் காக்க மாட்டார்களா என்னும் சோதனை வழி வெளிப்பட்டது.
போசனப் பிரியம் (பெருந்தீனி விருப்பம்) என்னும் பாவம்: இயேசு கற்களை அப்பமாக மாற்றித் தம் பசியைத் தீர்க்க முடியாதா என்னும் சோதனை வழி வெளிப்பட்டது.
பேராசை என்னும் பாவம்: உலக அரசுகள் மீது அதிகாரம் செலுத்தலாமே என்னும் சோதனை வழி வெளிப்பட்டது.

நோன்பு இருந்த ஒருவர் தம் பசியை ஆற்ற முனைந்தால் அதை "பெருந்தீனி விருப்பம்" என்று கூற முடியாது என்பதால் அதை ஓர் உயர்வு நவிற்சி அணி எனலாம் என்று ஜோன்சு என்பவர் கருத்துத் தெரிவிக்கிறார்.

பியோதர் தஸ்தயெவ்ஸ்கி என்னும் புதின ஆசிரியர் "கரமாசோவ் சகோதரர்கள்" என்னும் தம் புதினத்தின் ஒரு பாத்திரத்தின் வழி தருகின்ற விளக்கம் இது: இயேசு இவ்வுலகில் மெசியாவாக, மீட்பராக வந்தார். ஆனால் எத்தகைய மெசியா அவர்? அவர் கடவுளின் திருவுளத்திற்கு அமைந்து, அவரிடத்தில் நம்பிக்கை கொண்டவராகத் தமது பணியை ஆற்றுவாரா அல்லது தமது சொந்த விருப்பப்படி, அதிகாரத்தைக் கைப்பற்றி கொடுங்கோல் மன்னன் போல அரசுகளைக் கையகப்படுத்தி மக்களை ஒடுக்குவாரா? இது இயேசுவுக்கு ஏற்பட்ட சோதனை. அவர் முன்னிலையில் அதிகார மமதை ஒரு பக்கம் கீழ்ப்படிதல் மறுபக்கம் என்று இரு முடிவுகள் வைக்கப்பட்டன. அவர் எதைத் தேர்ந்தெடுப்பார்? - இதுவே இயேவுக்கு ஏற்பட்ட சோதனை. [17]

எனவே, இயேசு எந்த முடிவைத் தேர்ந்தெடுக்கும்படி சோதிக்கப்பட்டார்?

தமக்கு ஏற்படுகின்ற இன்னல்களிலிருந்து தம்மை விடுவிப்பது அவர் பணியா? (கற்களை அப்பமாக்கி உண்ணுவதற்கான சோதனை)
எல்லாரும் காணும்படி மந்திர மாயஜால வித்தைகள் நிகழ்ந்த்தி மக்களைக் கவர்வது அவரது பணியா? (கோவில் முகட்டு உச்சியிலிருந்து கீழே குதித்தாலும் காயம் ஏற்படாமல் தப்பிக்க சோதனை)
உரோமையரின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து மக்களை விடுவிக்கின்ற அரசியல் விடுதலைப் போராளியாக அவர் மக்களுக்குத் தம்மைக் காட்டுவாரா? (உலக அரசுகள் மீது ஆட்சி அதிகாரம் பெறுவதற்கான சோதனை)

ஜான் ஹவட் யோடர் (John Howard Yoder) என்பவர் எழுதிய “இயேசுவின் அரசியல்” (The Politics of Jesus) என்னும் நூலில் கூறுவது: இயேசு பாலைநிலத்தில் சந்தித்த சோதனைகள் பிற்காலத்தில் அவர் பணியாற்றிய காலத்தில் அரசியல் தலைவராக அவர் மாறும்படியாக அவருக்கு ஏற்பட்ட சோதனைகளின் முன் அறிவிப்புப் போல அமைந்தன. அச்சோதனைகள் கீழ்வருவன:

இயேசு பாலைநிலத்தில் ஆயிரக் கணக்கான மக்களுக்கு அதிசயமான விதத்தில் உணவு அளித்தார். ஐந்து அப்பங்களையும் சில மீன்களையும் பலுகச் செய்து அவர் மக்களுக்கு உணவளித்தார். உடனேயே மக்கள் அவரைத் தம் அரசராக ஆக்கிவிட முயன்றார்கள். அச்சோதனைக்கு இடம் கொடுப்பதா?
இயேசு எருசலேம் கோவிலுக்குச் சென்று அங்கு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவர்களை விரட்டியடித்தார். கோவில் மீது தமக்கு அதிகாரம் உண்டெனக் காட்டினார். அக்கட்டத்தில் அவருக்கு மக்களுடைய ஆதரவு தாராளமாக இருந்தது. ஓர் அரசியல் இயக்கத்தைத் தொடங்கிவிட்டால் என்ன என்ற விதத்தில் ஏற்பட்ட சோதனைக்கு இடம் கொடுப்பதா?
இயேசு தாம் துன்பங்கள் அனுபவிக்குமுன் கெத்சமனி தோட்டத்தில் தந்தையை நோக்கி மன்றாடிக்கொண்டிருந்த வேளையில் அவரைக் கைதுசெய்ய வந்தவர்களிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்கு வானதூதர்களின் படையை வரவழைக்கின்ற ஒரு சோதனை ஏற்பட்டது. அச்சோதனைக்கு இடம் கொடுப்பதா?

இவ்வாறு இயேசுவின் சோதனைகளை விளக்குகிறார் யோடர். 
Tags:    

Similar News