ஆன்மிகம்
இயேசு

இயேசு சந்தித்த இரண்டாம் சோதனை: உச்சியிலிருந்து கீழே குதிக்கலாமே

Published On 2020-06-12 09:26 GMT   |   Update On 2020-06-12 09:26 GMT
இயேசுவோ அலகையின் சோதனைக்கு இசையவில்லை. அவர், கடவுள் தமக்குக் கையளித்த பணியைப் பிரமானிக்கமாக இறுதிவரை நிறைவேற்றுவதிலேயே கண்ணும் கருத்துமாயிருந்தார்.
இயேசு சந்தித்த இரண்டாம் சோதனையில், அலகை இயேசுவை “திருநகரில் உள்ள கோவில்” உச்சிக்குக் கொண்டுசெல்வதாக உள்ளது. இதில் வருகின்ற “திருநகரம்” எருசலேம் என்றும், “கோவில்” என்பது “எருசலேம் நகர் கோவில்” என்றும் கிறித்தவர்களால் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

மத்தேயு நற்செய்தியில் “கோவில்” என்னும் சொல்வழக்கு 17 தடவை வருகிறது. அதில் ஒரு தடவை கூட “எருசலேம் கோவில்” என்று வெளிப்படையாகக் கூறப்படவில்லை. லூக்கா, நற்செய்தியில் தெளிவாக “எருசலேம் கோவில்” என்று கூறப்படுகிறது. அந்நற்செய்தியின் பெறுநரான “தியோபில்” யூத இனத்தவர் அல்ல என்பதால் அவருக்குத் தெளிவாகப் புரியும் அளவில் “எருசலேம் கோவில்” என்று எழுதப்பட்டதாகவும் அறிஞர் கருதுகின்றனர்.[20]

கோவிலின் “உயர்ந்த பகுதிக்கு” இயேசுவை அலகை கொண்டு சென்றதாக நற்செய்திகள் கூறுகின்றன. இந்த “உயர்ந்த பகுதி” எதைக் குறிக்கிறது என்று தெளிவில்லை. இது கோவில் கட்டடத்தின் கூரையாக இருக்கலாம்; அல்லது “மதில் உச்சியாக” இருக்கலாம்; அல்லது வெளியே நீண்டு நிற்கின்ற கோவில் மூலையின் முகடாக இருக்கலாம்.[18]

”பின்னர் அலகை இயேசுவை எருசலேமுக்கு அழைத்துச் சென்று கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, ‘நீர் இறைமகன் என்றால் இங்கிருந்து கீழே குதியும்; ‘உம்மைப் பாதுக்காக்கும்படி கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார்’ என்றும் ‘உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளால் உம்மைத் தாங்கிக்கொள்வார்கள்’ என்றும் மறைநூலில் எழுதியுள்ளது’ என்றது.” (லூக்கா 4:9-11).

ஆனால் இயேசுவோ அலகையின் சோதனைக்கு இசையவில்லை. அவர், கடவுள் தமக்குக் கையளித்த பணியைப் பிரமானிக்கமாக இறுதிவரை நிறைவேற்றுவதிலேயே கண்ணும் கருத்துமாயிருந்தார்.

எனவே, இயேசு அலகைக்குத் தகுந்த பதில் கொடுத்தார். அப்பதிலும் விவிலியத்தின் நூலான இணைச் சட்டத்திலிருந்து எடுக்கப்பட்டது: இயேசு அளித்த பதில்: “இயேசு அலகையிடம், “’உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்’ எனவும் எழுதியுள்ளதே” என்று சொன்னார்” (மத்தேயு 4:7).
Tags:    

Similar News