ஆன்மிகம்
இயேசு

மனிதனுடைய மிகபெரிய எதிரிகள்

Published On 2020-06-05 08:32 GMT   |   Update On 2020-06-05 08:32 GMT
மனிதனுடைய மிகபெரிய எதிரிகள் பிற மனிதர்ளோ எதிர்மாறான சூழ்நிலைகளோ அல்ல. அவன் வளரவிட்டு கொண்டிருக்கின்ற தவறான பழக்கங்களும், ஆசைகளும், கடினமாக மனநிலைகளும் தான் அவனை விடாமல் பின்தொடர்ந்து கொண்டிருக்கும் முக்கியமான எதிரிகள்.
உங்களுக்குள் யுத்தம் எதனாலே வருகிறது(யாக்கோபு-4:1)

மற்றவர்களால் நமக்கு துன்பங்கள் வந்தது உண்மைதான். சிலரலால் நாம் அதிகமாக வேதனையடையும் வேளைகள் வந்தது உண்மை தான். நம்முடைய சூழ்நிலைகளாலும், நாம் எதிர்பார்த்தறக்கு எதிராக நிகழ்ந்த காரியங்களினாலும் நாம் துயரமடைய நேரிட்டது உண்மை தான். ஆயிலும் பெரும்பாலான நம்முடைய கஷ்டங்களுக்கும், வருத்தங்களுக்கும் பிறர் அல்ல. சூழ்நிலைகள் அல்ல. நாமே தான் காரணமாயிருநதிருக்கின்றோம் என்பதே உண்மை.

நம்முடைய தவறான மனநிலைகளாலும், தவறான குணங்களாலும், தவறான முடிவுகளாலும், நமக்கு ஏராளமான துன்பங்களும் வேதனைகளும் வந்தது என்பது உண்மை. நாம் மட்டும நல்ல மனநிலையோடும், நல்ல சுபாவங்களோடும்,ந ல்ல சிந்தனையோடும், நல்ல உணர்வுகளோடும் வாழ்ந்திருந்தால் ஏராளமான மனவேதனைகள் தவிர்க்கப்பட்டிருக்கும். நாம் சரியாக இருந்திருந்தால் பிறறோ, சூழ்நிலைகளோ நம்மை இந்த அளவிற்கு பாதித்திருக்க முடியாது.

நம்முடைய துன்பங்களுக்கு காரணமாயிருந்தவர்களை நினைத்து நினைத்து மனங்குமுறுகின்றோம். நமக்கு வேதனைகளை ஏற்படுத்திய சூழ்நிலைகளை எண்ணி சுய பச்சாதாபம் கொள்கின்றோம். ஆனால் நம்முடைய தவறான குணங்களாலும், ஊறிப்போன தவறான மனப்பண்புகளாலும் நமக்கு ஏற்பட்ட வருத்தங்களையும், சோர்வுகளையும் எண்ணி மனம் வருந்துகின்றோமா?

மனிதனுடைய மிகபெரிய எதிரிகள் பிற மனிதர்ளோ எதிர்மாறான சூழ்நிலைகளோ அல்ல. அவனுடைய தீய பாவங்கள் தான் எதிரிகள். அவன் வளரவிட்டு கொண்டிருக்கின்ற தவறான பழக்கங்களும், ஆசைகளும், கடினமாக மனநிலைகளும் தான் அவனை விடாமல் பின்தொடர்ந்து கொண்டிருக்கும் முக்கியமான எதிரிகள். நம்முடைய தவறான குணங்களும், கடவுளை மையமாக கொண்டு வாழாத மனநிலைகளும் நமக்கு ஏற்படுத்தும மனவேதனைகளையும், சோர்வையும் எண்ணி மனம் வருந்த வேண்டும். அவற்றை சரி செய்திட தேவகிருபையும் பலமும் பெற்றுவிட்டால் 25 சதசீத துன்பங்களை நல்ல குணங்களுள்ள இருதயத்தால் எளிதாக மேற்கொண்டுவிடலாம். நமக்கு எதிராக நின்று செயல்படும் தவறான குணங்களை குறித்து கவலைப்படாமல் மனிதர்களையும், சூழ்நிலைகளையும் எண்ணி நொந்து கொள்வதால் நன்மையில்லை.

“தன்னை சீர் செய்யாமல் பிறரை சீர்திருத்த விரும்புகிறவன்
தானும் சீர்கெட்டு பிறரையும் சீரழிக்கின்றான்”
Tags:    

Similar News