ஆன்மிகம்
இயேசு

பரிசுத்தம் எதற்காக?

Published On 2020-06-01 04:02 GMT   |   Update On 2020-06-01 04:02 GMT
சிலரிடம் சுத்தம் உண்டு. ஆனால் அது பரிசுத்தம் அல்ல. அது சுயபலத்தால் சாதிக்கப்பட்ட சுயநீதி வாழ்க்கை. பரிசுத்தம் என்பது கடவுள் உறவு சார்ந்தது. கடவுள் அன்பை பிரதிபலிப்பதே பரிசுத்தம். க
தேவைனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான (ரோமர்-12:2)

தந்தை ஒருவர் இறப்பதற்கு முன்பு ஒரு பெரிய வீட்டை தன் மகன்களிடம் கட்ட சொன்னார். அந்த வீட்டை மிக மிக சுத்தமாக வைக்க வேண்டும் என்றார். அந்த வீட்டை சுற்றிலும் அழகான பூந்தோட்டம் அமைத்து அதனை நன்றாக பராமரிக்க வேண்டும் என்றார். சில காலங்களுக்கு பிறகு தந்தை இறந்து விட்டார். மகன்கள் தந்தையின் விருப்பப்படி அழகான வீட்டைகட்டி அதற்குள் ஒரு சிறுதூசி கூட தங்கமுடியாதபடி தினமும் சுத்தமாக வைத்தனர். அழகான பூந்தோட்டம் அமைத்து மிகச்சிறப்பாக பராமரித்தனர். ஆனால் ஒரு வேடிக்கை என்னவென்றால் வீட்டை சுத்தமாக வைப்பதற்கும், பூந்தோட்டத்தை பராமரிப்பதற்கும் அதிகமாக கவனம் செலுத்திய அவர்கள் ஒருபோதும் அந்த வீட்டை தங்குமிடமாக உபயோகிக்கவில்லை. தந்தை சொன்னபடி செய்தபோதிலும் தந்தையின் நோக்கம் அவர்களுக்கு விளங்கவில்லை.

சிலருக்கு ஆன்மிக வாழ்க்கையும் இப்படியாகவே உள்ளது. அவர்கள் தங்களின் வாழ்க்கையை மிக சுத்தமாக வைத்து கொள்வது தான் கடவுளின் விருப்பம் என்று எண்ணி அதில் கவனமாயிருக்கின்றார்கள். அவர்கள் எதைச்செய்தாலும் எங்கு போனாலும் பரிசுத்தம் பரிசுத்தம் என்று மட்டும் சிந்திக்கின்றனர். அவர்கள் அசுத்ததிற்கும், ஆகாதவைகளுக்கும் இடம் தராமல் அவற்றை தூரமாக்குகின்றனர். தங்களை ஏதாவது ஒன்று தீட்டுபடுத்திவிடுமோ என்ற மிகவும் ஜாக்கிரதையாக இருக்கின்றனர்.

ஆனால் இந்த பரிசுத்தத்தின் மேல் உள்ள கடவுளின் நோக்கம் அவர்களுக்கு தெரியவில்லை. நாம் கடவுளின் உறவில் வாழ வேண்டும். கடவுள் நம்மோடு தங்கி நம்மை நடத்த வேண்டும். நம் மூலமாக கடவுள் தம்முடைய அன்மை, கிருபையை கருணையை, அனேகருக்கு வெளிப்படுத்த வேண்டும். பரிசுத்தராகிய தேவன் நம்மோடு தங்கியிருந்து செயல்படுத்துவதற்காக தான் கடவுள் நம்மிடம் பரிசுத்தத்தை எதிர்பார்க்கின்றார்.

சிலரிடம் சுத்தம் உண்டு. ஆனால் அது பரிசுத்தம் அல்ல. அது சுயபலத்தால் சாதிக்கப்பட்ட சுயநீதி வாழ்க்கை. பரிசுத்தம் என்பது கடவுள் உறவு சார்ந்தது. கடவுள் அன்பை பிரதிபலிப்பதே பரிசுத்தம். கடவுளுக்கேற்றபடி அன்பு, அமைதி, சந்தோஷத்தை வெளிப்படுத்துவதே பரிசுத்தம். கடவுள் ஐக்கியத்தின் பிரதிபலிப்புதான் பரிசுத்தம். நம்மை சுத்தம் செய்து கொண்டேயிருப்பது அல்ல. கடவுள் உறவினை அதிகமாக நமக்குள் தேடுவதே பரிசுத்தம்.

“தாழ்த்தி கொள்கின்ற நிலையில் நீ நல்லவனாயிரு
உன்னை உயர்த்த வேண்டிய நிலையில் கடவுள் வல்லவராயிருப்பார்.”

சாம்சன்பால்.
Tags:    

Similar News