ஆன்மிகம்
இயேசு

உயர்ந்த எண்ணங்களை வளர்ப்போம்

Published On 2020-05-07 08:48 IST   |   Update On 2020-05-07 08:48:00 IST
வாழ்க்கையில் பெற்றிப்பெற்ற பெரும்பான்மையான மனிதர்கள் கண்ட கனவே அவர்களை செயலாற்றால் மிக்க மனிதர்களாக மாற்றியது என கூறியுள்ளனர்.
நமது உள்ளத்தில் உள்ள உயர்ந்த எண்ணங்களே நமது இலக்கினை தெளிவு பெற வைக்கும். எதிர்காலத்தை பற்றிய நம்பிக்கை ஒளியினை உருவாக்கும். இலக்கை அடைவதற்கு முன்பே அதனை அடைந்ததாக கனவு காண வேண்டும். கனவினை நனவாக்க முயற்சிக்கும் போது அதனுடன் தொடர்புடைய செயல்களை நாம் சிந்திக்கிறோம். வாழ்க்கையில் பெற்றிப்பெற்ற பெரும்பான்மையான மனிதர்கள் கண்ட கனவே அவர்களை செயலாற்றால் மிக்க மனிதர்களாக மாற்றியது என கூறியுள்ளனர்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி விக்ரம் சாராபாய், தனது வெற்றியை இவ்வாறு பதிவு செய்கிறார். சாதனைகளை தொடங்கி செயல்படுத்த பல ஆண்டுகள் கடுமையாக முயற்சி மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதனை சாதித்து முடிக்கலாம் என்ற கனவே என்னை இயக்கியது. இந்தியா தனது அறிவியல் அறிவினையும், திறமையான இளைஞர்களையும் பயன்படுத்தி தனது நாட்டுக்கு தேவையான பெரிய ராக்கெட்டுகளை தானே நிறுவி சொந்தமாக செயற்றை கோள்களை விண்ணில் செலுத்த வேண்டும்.

வானிலை ஆராய்ச்சி, தொலைத்தூர தொடர்பு, தகவல் தொடர்பு போன்ற எல்லா துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று நான் கண்ட கனவே இன்று செயல்வடிவம் பெற்றது என்றார். இதனை போன்று ஒவ்வொரு இளைஞனும் உயரிய எண்ணங்களை தனக்குள் விதைக்க வேண்டும். இறையருளின் காலமாகிய இந்த தவக்காலத்தில் ஒவ்வொரு மனிதனும் உயரிய எண்ணமொன்றினை தன்னுள் விரைத்திட வேண்டும். கனவுகள் மனவுறுதியுடன் நிறைவேற்றப்பட்டால் நிச்சயம் நனவாகி எதிர்கால வாழ்விற்று உதவும். இன்றைய சமுதாயத்தினை சீரழிக்கின்ற ஏராளமான முரண்பாட்டு சிந்தனைகள், இந்த சமுதாயத்தில் மிக அதிகம் காணப்படுகின்றன.

இவற்றை குறிப்பிட்டு இனம் கண்டு, தேவையற்றவைகளை முழுவதுமாய் விட்டு விடுவதும், தேவையானவற்றை இன்னும் ஆதரிப்பதும், கொண்டாடுவதும் மிக அவசியம். இயற்றை பராமரிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரங்கள் வளர்ப்பு போன்றவையெல்லாம் இன்றைய காலத்தின் மிக முக்கியமான பயன்பாடுகளாகும். இவற்றினை பற்றிய தேடுதல்களை இன்னும் அதிகமாய் விரைவுபடுத்தி கொண்டு அதற்கேற்ப பல திட்டங்களை வடிவமைத்து ஒவ்வொரு நாளும் செயல்படுவதற்கு அதிக அக்கறை எடுக்க வேண்டும். நமது எண்ணங்கள் உயர்ந்து வளர்ந்தால் சமுதாயத்தில் நல்ல பலன்களை அறுவடை செய்ய முடியும்.

அருட்பணியாளர் குருசு கார்மல்,
கோட்டார் மறை மாவட்டம். 

Similar News