ஆன்மிகம்
பூண்டி மாதா

பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழா ரத்து: பேராலய நிர்வாகம் தகவல்

Published On 2020-05-05 05:27 GMT   |   Update On 2020-05-05 05:27 GMT
கொரோனா தொற்று நோய் பரவல் தடுப்பு முன்னிட்டும்,அரசின் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாலும் இந்த ஆண்டு பூண்டிமாதாபேராலய ஆண்டு திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள புகழ் பெற்ற பேராலயம் பூண்டி மாதாபேராலயம். இந்த பேராலயத்தின் ஆண்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மே 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும். நவநாட்களில் சிறு தேர்பவனி நடைபெறும்.

மே 14-ந்தேதி பூண்டி அன்னையின் தேர்பவனி நடைபெறும். 15-ந் தேதி காலை நடைபெறும் திருவிழா திருப்பலியுடன் நிறைவு பெறும். இந்த ஆண்டு மார்ச் 24-ந்தேதிமுதல் கொரோனா நோய்தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் பூண்டி மாதா பேராலயத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஈஸ்டர் தினத்தில் பேராலய பங்குத்தந்தையர்கள்மட்டும் பங்கு கொண்ட திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் மேலும் தற்போது மே 17-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பூண்டி மாதா பேராலய திருவிழா நடைபெறுமா? என்று பக்தர்கள் மத்தியில்கேள்வி எழுந்தது.

இதுகுறித்து பேராலய நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்று நோய் பரவல் தடுப்பு முன்னிட்டும்,அரசின் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாலும் இந்த ஆண்டு பூண்டிமாதாபேராலய ஆண்டு திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து விரைவில் நாம் மீண்டு வருவோம் என்று பேராலய அதிபர் மற்றும் அருட்தந்தையர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News