ஆன்மிகம்
இயேசு

தைரியத்தை இழக்காதீர்கள்

Published On 2020-05-02 03:37 GMT   |   Update On 2020-05-02 03:37 GMT
உள்ளத்தில் தைரியம் இருந்தால், அசாத்தியமான செயல்பாடுகளுக்கு நாம் உரிமை உடையவர்களாய் மாறுவோம். வாழ்க்கை பொழுதுகளை அர்த்தமாக்கி கொள்ள இந்த நாளை பயன்படுத்திடுவோம்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் பேராசிரியராக பணிபுரிந்தவர் ஸ்டீபன் ஹாக்கிங். இவர் ஒருமுறை நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் கஷ்டப்பட்டார். இவரால் இனி இயல்பாக ஆராய்ச்சி செய்ய முடியுமா? என ஏரளாமான கேள்விகள் முன் வைக்கப்பட்டன. அவருடைய நண்பர்பள் கொடுத்த தொடர் ஆதரவு, நவீன மருத்துவ சிகிச்சை காரணமாக வெகு விரைவிலே நல்ல இயல்வான நிலைக்கு திரும்பினார். ஸ்ட்ரிங் தியரி எனும் புதிய உண்மையை கண்டுபிடித்தார். இது இயற்பியல் துறையின் மாபெரும் கண்டுபிடிப்பாகும். உடலில் எவ்வளவு குறைபாடுகள் இருந்தாலும் மனதில் தன்னம்பிக்கை இருந்தால் எதையும் சாதித்திட இயலும்.

எந்தவொரு சூழலிலும் நம்பிக்கையையும், தைரியத்தையும் இழந்து விடாதீர்கள். நாம் முடிக்க வேண்டும் என்ற செயலை எவ்வளவு கஷ்டப்பட்டாலும் முடித்து விட வேண்டும் என்ற இயல்போடு செயல்படுங்கள். நம்மில் பலர் தங்களுக்குள்ளாகவே ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி கொண்டு வாழ்ந்து வருகின்றனர். தோல்வி மனப்பான்மையை நம்பில் இருந்து அகற்றுவதற்கான உறுதிபாட்டினை முன்னெடுத்து பயணம் செய்திடுங்கள். சரியான முயற்சியே சரியான குறிக்கோளை அடைவதற்கு உதவி செய்யும். சுயநலமற்ற ஈடுபாட்டு உணர்வோடு முன்னோக்கி பயணம் செய்திட வேண்டும்.

இறையருளின் காலமாகிய இத்தவக்காலத்தில் நமது ஈடுபாடும், அக்கறையும் எதன் மீது கட்டமைக்கப்படுகிறது என்பதை அடையாளம் கண்டிடுவோம். நமது செயல்பாடு நேர்மையாக இருப்பதற்கான வழிமுறைகளை உருவாக்கி கொண்டு பயணம் செய்வோம். ஒவ்வொரு நாளுமே ஏராளமான சவால்களும், சறுக்கல்களும், சேறுகளும் நம்மீது தூக்கி வீசப்படும் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை. இதை கண்டு அஞ்சி நடுக்கி விட்டோம் என்றால் வீழ்ச்சி என்பது உள்ளத்தில் இருந்தே ஆரம்பமாகும். ஒவ்வொரு நாளும் இயலும் என்பதையை நமது உதடுகள் அதிகமாய் உச்சரிக்க வேண்டும். அப்போது ஏராளமான வண்ணமயமான செயல்பாடுகள் நமக்குரியதாய் கிடைக்கும். உள்ளத்தில் தைரியம் இருந்தால், அசாத்தியமான செயல்பாடுகளுக்கு நாம் உரிமை உடையவர்களாய் மாறுவோம். வாழ்க்கை பொழுதுகளை அர்த்தமாக்கி கொள்ள இந்த நாளை பயன்படுத்திடுவோம்.

அருட்பணியாளர் குருசு கார்மல்
கோட்டார் மறை மாவட்டம்.
Tags:    

Similar News