ஆன்மிகம்
இயேசு

இறை வேண்டுதலில் வாழ்க்கை பயணம்

Published On 2020-04-27 04:20 GMT   |   Update On 2020-04-27 04:20 GMT
வாழ்க்கை என்பது ஏதோ பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம் என்பதல்ல. போட்டிகள், பொறாமைகள் நிறைந்த இந்த உலகில் சரித்திரம் படைக்க, இறைவனின் திருவுருவில் படைக்கப்பட்டவர்கள் நாம்.
வாழ்க்கை என்பது ஏதோ பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம் என்பதல்ல. போட்டிகள், பொறாமைகள் நிறைந்த இந்த உலகில் சரித்திரம் படைக்க, இறைவனின் திருவுருவில் படைக்கப்பட்டவர்கள் நாம். இறைவார்த்தையின் படி நடந்து மேலும் வாழ்வில் வளர இதோ விவிலியத்தின் ஒருபகுதி(மத்தேயு- 7:21. 24-27)

என்னை நோக்கி ஆண்டவரே, ஆண்டவரே எனச்சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக என் தந்தையின் திருவுளப்படி நடப்பவரே செல்வர். இறை வார்த்தையின் படி நடப்பவர்கள் பாறை மீது அறிவாளிக்கு ஒப்பாவார். மழை பெய்தது, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அவை வீட்டின் மேல் மோதியும் விழவில்லை. ஏனெனில் பாறையிள் மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது. நாம் சொல்லும் வார்த்தையை கேட்டு அவற்றின் படி செயல்படாதவர்கள் மணல் மீது வீட்டை கட்டிய அறிவிலிக்கு ஓப்பாவர். மழை பெய்தது. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அவை அந்த வீட்டை தாக்க பேரழிவு நேர்ந்தது.

வாழ்க்கை எனும் வீட்டிற்கு அடித்தளமாக அன்பு, நம்பிக்கை, உழைப்பு, இரக்கத்தை நாம் நம் கற்பாறையாம் கடவுளாகவே கொண்டுள்ளோம். நாம் வாழ்வை பொருளாதாரப்பிரச்சனைகள், உறவுகள் தாக்கினாலும் உறுதியான மனதோடு வாழ்வோம். அதனால் இதற்கு மாறாக நம் வாழ்க்கை வீட்டை சுயநலம், பதவி, பணம், பொறாமை மீது கட்டினோம் என்றால், மணல் மீது கட்டப்பட்ட வீட்டை போன்று அழிந்து விடுவோம். இல்வாழ்க்கை சிறக்க இறைப்பற்றுதலில் நம்பிக்கை கொண்ட மனிதர்களாய் மாறுவோம். வாழ்ந்து பார். உறவின் உன்னதம் உனக்கு தெரியும்.

வாழ்க்கையில் இறைவேண்டலையும் இணைத்துப்பார் உன் வாழ்வே ஒளிமயமாகும்.

நாம் செய்த பாவத்திற்கு சிலுவை சுமந்த அவர் இன்றளவிலும் நம்மை மன்னிக்கும் தெய்வமாகவே இருக்கிறார். மனம் மாறுங்கள் நமது இறைவேண்டலில் வாழ்க்கை பயணம் தொடர.

எஸ்.அமலா.சீனிவாசநல்லூர்.

Tags:    

Similar News