ஆன்மிகம்
இயேசு

அன்பிலே நிலைத்திருங்கள்

Published On 2020-04-21 05:07 GMT   |   Update On 2020-04-21 05:07 GMT
நமக்காக மரித்த தேவன் ஒவ்வொரு நாளும் நமக்காக அன்பு செலுத்த வல்லவராய் இருக்கிறார் என்று நாம் மறந்து போக வேண்டாம்.
இன்றைய நாகரீக வாழ்க்கையில் பல்வேறு விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக தொலைக்காட்சி, செல்போன் போன்றவற்றினால் நம் வாழ்க்கையை அதிலே தொலைத்து விடுகிறோம். நம் வீட்டிற்கு உறவினர்கள் வந்தால் கூட அவர்களை பார்த்து வாருங்கள் என்று கூட சொல்ல முடியாத அளவிற்கு நாம் செல்போனில் மூழ்க வேண்டி உள்ளது. இப்படி நம் உறவே செல்போன்தான் என்ற அளவுக்கு இப்போது உலகம் மாறி போய் உள்ளது. இப்படி நாம் ஒவ்வொருவருவரும் அன்பு செலுத்த நேரமில்லாமல் வேலைக்கு செல்ல வேண்டும், சம்பாதிக்க வேண்டும் என்று தான் ஒவ்வொருவரும் ஓடிக்கொண்டிருக்கிறோம். இப்படி வாழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் தான் சில கஷ்டங்கள் வரும் போது உறவுகளின் அன்பையும், தேவனின் அன்பையும் தேட வேண்டும் நிலை உள்ளது.

எனவே தேவனுடைய அன்பு எவ்வளவு பெரியதாய் இருக்கிறது என்று பார்க்க வேண்டும். தேவனுடைய அன்பு நம் இருதயத்தில் பாயும் வரை எவ்வளவு பெரிய மனித தன்மையான அன்பினாலும் நம்முடைய இருதயத்தை நிறைவடைய செய்ய முடியாது. தேவ அன்பினால் மட்டுமே நம் இருதயத்தை நிறைவடைய செய்வதாகவும், நம் வாழ்க்கைக்கு தேவையானதை திருப்தியடைய செய்வதாகவும் உள்ளது.

இதைத்தான் வேதாகமத்தில் யோவான் 15-ம் அதிகாரம் 9-ம் வசனத்தில் பிதா என்னில் அன்பாய் இருக்கிறது போல, நானும் உங்களில் அன்பாய் இருக்கிறேன். என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள் என்று கூறப்பட்டு உள்ளது.

எனவே நம்முடைய வாழ்க்கையில் தம் உறவுகளை விட்டு விட்டு எங்கு நமக்கு வேலை கிடைக்கிறதோ? அங்கு போய் வேலை செய்து கொண்டிருப்போம். உறவினர்கள் வீடுகளுக்கு செல்வதே ஏதோ விசேஷ நாட்களில் மட்டும் தான் சென்று அந்த உறவுகளின் அன்பான பாசத்தை நாம் சேர்த்துக் கொள்ள முடியும். ஆனால் நமக்காக மரித்த தேவன் ஒவ்வொரு நாளும் நமக்காக அன்பு செலுத்த வல்லவராய் இருக்கிறார் என்று நாம் மறந்து போக வேண்டாம். இந்த தவக்காலத்தில் தேவனிடத்தில் அன்பு செலுத்தி அவர் நம்மீது அளவுகடந்த அன்பை செலுத்த நம் வாழ்க்கையை அர்ப்பணிக்க கடமைப்பட்டவர்களாய் இருப்போம்.

சகோ.பெலிக்ஸ், பலவஞ்சிபாளையம், திருப்பூர்.
Tags:    

Similar News