ஆன்மிகம்
வேளாங்கண்ணியில் உள்ள ஆரோக்கியமாதா பேராலயத்தில் ஏசு உயிர்த்தெழும் நிகழ்ச்சி நடந்தபோது எடுத்தபடம்.

வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா பேராலயத்தில் களையிழந்த ஈஸ்டர் பண்டிகை

Published On 2020-04-13 03:51 GMT   |   Update On 2020-04-13 03:51 GMT
எப்போதும் சுற்றுலா பயணிகளின் நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்படும் வேளாங்கண்ணி கடற்கரை தற்போது ஊரடங்கு காரணமாக வெறிச்சோடி காணப்படுகிறது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் ஆரோக்கியமாதா பேராலயம் உள்ளது. உலக அளவில் பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ பேராலயங்களுள் ஒன்றான இந்த பேராலயத்துக்கு உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் வருகை தருகிறார்கள்.

எப்போதும் சுற்றுலா பயணிகளின் நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்படும் வேளாங்கண்ணி கடற்கரை தற்போது ஊரடங்கு காரணமாக வெறிச்சோடி காணப்படுகிறது. இங்கு வழக்கமாக கோலாகலமாக கொண்டாடப்படும் ஈஸ்டர் பண்டிகை இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் இன்றி களையிழந்து காணப்பட்டது. ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு ஏசு உயிர்த்தெழும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி பூட்டப்பட்ட பேராலயத்தில் பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் திருப்பலி நடந்தது. அப்போது ஏசு சொரூபம் திரையால் மூடப்பட்டிருந்தது. இரவு 11.20 மணிக்கு திரை விலக்கப்பட்டு ஏசு கையில் சிலுவை கொடியை ஏந்தியவாறு காட்சி அளித்தார்.

இதைத்தொடர்ந்து ஏசு உயிர்த்தெழுந்ததாக அறிவிக்கப்பட்டது. பின்னர் நேற்று காலை 6 மணிக்கு திருப்பலி நடந்தது. இதில் ஊரடங்கு காரணமாக பக்தர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. 
Tags:    

Similar News