ஆன்மிகம்
இயேசு

தவக்கால சிந்தனை: காண்கிற தேவன்

Published On 2020-03-23 03:11 GMT   |   Update On 2020-03-23 03:11 GMT
தேவ பிள்ளைகளே தேவன் நம்மை காண்கிற தேவனாய் இருக்கிறார். நாம் அவருக்கு கீழ்படிதல் உள்ளவர்களாக இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? என்று இந்த தவக்காலத்தில் சிந்தித்து செயல்படுவோம். தேவன் தாமே ஆசீர்வதிப்பாராக ஆமென்.
குமார் என்னும் ஓர் சிறுவன் இருந்தான். அவன் அம்மா அவனிடம் ஒவ்வொரு நிமிடமும் நாம் செய்யும் காரியங்களை எல்லாம் தேவன் பார்த்துக்கொண்டிருக்கிறார். எனவே நாம் எந்த தவறும் செய்யக்கூடாது என்று சிறுவயது முதலே சொல்லி கொடுத்து தேவனுக்கு பயந்தவனாகவும், கீழ்படிதல் உள்ளவனாகவும் வளர்த்து வந்தார்.

இப்படி தேவனுக்கு கீழ்படிதல் உள்ள சிறுவனாக இருந்த குமாரும், அவனது நண்பன் நவீனும் சேர்ந்து பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது செல்லும் வழியில் ஒரு மாம்பழ தோட்டம் இருப்பதை பார்த்தனர். உடனே நவீன், “டேய் குமார் உனக்கு மாம்பழம் என்றால் நன்றாக பிடிக்கும் அல்லவா! நான் போய் அந்த மாம்பழ தோட்டத்தில் போய் பழங்களை பறித்து வருகிறேன். யாரும் வருகிறார்களா? என்று நீ கவனித்துக்கொள். அப்படி யாராவது வந்தால் எனக்கு தகவல் சொல்” என்று நவீன் மாம்பழத்தை பறிக்க தோட்டத்திற்குள் சென்றான்.

நவீன் மாம்பழத்தின் மீது கை வைத்தவுடன், தோட்டத்திற்கு வெளியில் இருந்த குமார், ‘டேய் நவீன் யாரோ வருகிறார்கள்’ என்று சத்தமிட்டான், உடனே நவீன் தோட்டத்தை விட்டு வெளியே ஓடி வந்து விட்டான். ஆனால் அங்கு பார்த்தால் யாருமே இல்லை. உடனே நவீன், குமாரை பார்த்து,‘ டேய், யாருமே இல்லையே பின் ஏன் என்னை பழத்தை பறிக்க விடாமல் சத்தமிட்டு கூப்பிட்டாய்’ என்று கேட்டான். அதற்கு உடனே குமார், “டேய் நவீன் நாம் இந்த தோட்டத்தில் யாரும் இல்லாத நேரத்தில் மாம்பழங்களை பறித்து சாப்பிடுவது சரியல்ல. தோட்டத்தின் உரிமையாளரிடம் கேட்டு பறித்து சாப்பிடலாம். அப்படி இல்லை என்றால் அது திருட்டு என்று ஆகி விடும்” என்று கூறினான். அதற்கு நவீன், “டேய் யாருமே இல்லை, பின் யாரிடம் கேட்பது, நான் பறித்து தருகிறேன், யாருக்கும் தெரியாமல் சாப்பிட்டு விடலாம்” என்று கூறினான்.

ஆனால் குமாரோ, ‘நவீனை பார்த்து யாருக்கும் தெரியாது’ என்று சொல்வது தவறு. இங்கு தோட்டத்தில் யாரும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் தேவன் எப்போதுமே நம்மை பார்த்துக்கொண்டே இருப்பார் என்று எனது அம்மா சொல்லியிருக்கிறார்கள். மேலும் வேதாகமத்தில் ஆதியாகமம் 16-ம் அதிகாரம், 13-ம் வசனத்தில், “நீர் என்னைக் காண்கிற தேவன்” என்று நான் படித்துள்ளேன். எனவே யாருக்கும் தெரியாமல் அந்த மாம்பழத்தை பறிக்காமல், பின்னர் தோட்டத்து உரிமையாளரிடம் கேட்டு நாம் சாப்பிடலாம் என்று கூறி குமாரும் அவன் நண்பன் நவீனும் பள்ளிக்கு சென்றனர்.

எனவே தேவ பிள்ளைகளே தேவன் நம்மை காண்கிற தேவனாய் இருக்கிறார். நாம் அவருக்கு கீழ்படிதல் உள்ளவர்களாக இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? என்று இந்த தவக்காலத்தில் சிந்தித்து செயல்படுவோம். தேவன் தாமே ஆசீர்வதிப்பாராக ஆமென்.

சகோ.சாம்ராஜ், சுவிஷேச ஊழியம், பல்லடம்.
Tags:    

Similar News