ஆன்மிகம்
உவரி அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

உவரி அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2020-01-29 03:43 GMT   |   Update On 2020-01-29 03:43 GMT
நெல்லை மாவட்டம் உவரி அந்தோணியார் உயர் திருத்தலத்தில் இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்டம் உவரி அந்தோணியார் உயர் திருத்தலத்தில் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஏ.ஸ்டீபன் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்து, மறையுரையாற்றினார். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

திருவிழா அடுத்தமாதம்(பிப்ரவரி) 9-ந் தேதி வரை தொடர்ந்து நடைபெறும். விழா நாட்களில் தினமும் காலை 5 மணிக்கு திருப்பலியும், திருயாத்திரை திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, புனிதரின் மன்றாட்டு மாலை, மறையுரை, திவ்ய நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெறும்.

பிப்ரவரி 7-ந் தேதி(வெள்ளிக்கிழமை) 11-ம் திருவிழாவை முன்னிட்டு, அன்று இரவு 11 மணிக்கு புனித அந்தோணியார் சப்பர பவனி நடைபெறுகிறது. மறுநாள்(சனிக்கிழமை) மாலை திருவிழா சிறப்பு மறையுரை, ஆராதனையும், பிப்ரவரி 9-ந் தேதி காலை 6 மணிக்கு உயர் திருத்தல பெருவிழா, நிறைவு திருப்பலியும் நடக்கிறது. இதை தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஏ.ஸ்டீபன் தலைமை தாங்கி, நடத்தி வைக்கிறார். இதை தொடர்ந்து காலை 9 மணிக்கு சப்பர பவனி நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை பங்கு தந்தைகள் தொமினிக் அருள்வளன், வில்லியம், திருத்தொண்டர் அந்தோணி செபாஸ்டின், திருத்தல நீதிக்குழு, பணிக்குழு, அருள் சகோதரிகள், பங்கு மக்கள் இணைந்து செய்துள்ளனர். விழாவை முன்னிட்டு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவிலில் இருந்து உவரிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
Tags:    

Similar News