ஆன்மிகம்
இயேசு

அநீதியை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்

Published On 2020-01-27 06:10 GMT   |   Update On 2020-01-27 06:10 GMT
“நீதிநெறியில் நடப்பவர்கள், நேர்மையானவற்றை பேசுபவர், கொடுமை செய்து பெற்ற வருவாயை பெறுப்பவர், கையூட்டு வாங்க கை நீட்டாதவர், (எசா.33.15)”
“நீதிநெறியில் நடப்பவர்கள், நேர்மையானவற்றை பேசுபவர், கொடுமை செய்து பெற்ற வருவாயை பெறுப்பவர், கையூட்டு வாங்க கை நீட்டாதவர், (எசா.33.15)”

தனக்கு பெரும் துரோகம் செய்து பிறகு மனம் வருந்திய அலுவலம் ஒருவரை நிறுவனத்தின் தலைவர் மன்னித்தார். அது தனிப்பட்ட துரோகமே தவிர நிறுவனம் சார்ந்த துரோகமல்ல என்பதால் தான் மன்னித்தீர்களா? என்ற கேட்ட போது அவர் சொன்னார். நான் ஆயிரம் தவறுகள் செய்த பிறகும் என்னை நான் மன்னித்து அன்பு செய்கிறேன். ஒரு தவறுக்காக ஒருவரை தண்டிப்பது என்ன நியாயம். நோன்பு என்பது சடங்கல்ல. அது ஒரு சபதம்.

எடுத்த காரியத்தை முடித்தே தீருவேன் என்ற தீரம். எப்படியாவது தன் குழந்தையை காப்பாற்ற வேண்டுமே என்று உணவு, உறக்கம் மறந்து எத்தனை பெற்றோர் மிகுந்த பாடு படுகிறார்கள். அந்த பாடுகளே நோன்பு. தன் மகனின் அல்லது மகளின் திருமண காரியம் தடையின்றி நல்லவிதத்தில் நடக்க வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளும் அலைச்சல்களும் தாங்கிக்கொள்ளும் சுமைகளும் நோன்புதான். மாறாக இயல்பாய் தியாகம் கலந்த சுகமான இழப்புகளை அனுபவிப்பதே ஆகும்.

அதிகமாக நோன்பிருந்தால், இறைவன் அதிகமாய் ஆசிர்வாதிப்பார் என்ற சமன்பாடு நோன்பின் இலக்கு அல்ல. தன்னை கடந்து தன்னையே மறந்து பிறர் வாழ வேண்டாம் என்ற அடங்காத்துடிப்பில் தன்னையே பலியாக்குவது தான் நோன்பு. எனவே தவக்காலம் மட்டுமே நோன்புக்காலம் அல்ல. நோன்பே நமது ஆயுள்காலம்.

அவமானம் வந்தாலும், உறவுகள் பிரிந்தாலும், நட்பு குறைந்தாலும், துன்பங்கள் வந்தாலும் உண்மையின் பக்கம் நிற்போம், நீதியாக நேர்மையாக செயல்படுவோம். என்ற உறுதியினை எடுக்கவேண்டும். சமூகத்தின் தரமற்ற பார்வையினை மாற்றிட நமது நேரம், உழைபபு அனைத்தையும் கொடுக்கும் போது நாம் நீதியின் பக்கம் நின்று செயல்படுகின்றோம். நீதியை வாழச்செய்கின்றோம். நீதிக்கு உயிர் கொடுக்கின்றோம். நீதியாக வாழ்வது மட்டும் முக்கியமல்ல. அநீதி நடைபெறும் போது அதை எதிர்த்து குரல் கொடுப்பதும், அங்கு நீதியை நிலைநாட்ட நாம் முயற்சிப்பதும் நீதிக்கான மற்றொரு பக்கம், எனவே அநீதியை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்.

Tags:    

Similar News