ஆன்மிகம்
இயேசு

முயற்சியே வெற்றி தரும்

Published On 2020-01-23 11:18 IST   |   Update On 2020-01-23 11:18:00 IST
சிறுமுயற்சிகளில் நாம் பெறுகிற வெற்றியே, பெறும் முயற்சிகளின் வெற்றியை தீர்மானம் செய்கின்றன. முயற்சிக்கு வயதும் தடையில்லை. முயற்சிக்கு முடிவும் கிடையாது.
உலகம் கொண்டாடுகிற எல்லா மாமனிதர்களுமே ஏதோ ஒரு நாழிகையில் உயரத்தை எட்டிப்பிடித்தவர்கள் அல்ல. தொடர்ந்து பயணம் செய்தே சிறந்த இடம் வந்தவர்கள் ஆவர். நம் நாட்டின் விடுதலைக்காக போராடியவர்கள். எவரெஸ்ட் சிகரத்தை எட்டிபவர்கள், நிலாவுக்கு பயணம் செய்தவர்கள் என அனைவருமே முயற்சியினை மூலதனமாக்கியதாலே வரலாற்றின் பக்கங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு சாதனையை அடைவதற்கு தொடர் முயற்சியும், ஆர்வமும், ஈடுபாடும் மிக மிக அவசியமாகும். எந்தவொரு செயலை/யம் தொடங்கும் முன்பே சரிப்பட்டு வராது என நினைப்பதும், தாழ்வு மனப்பான்மை கொண்டு நம்மால் முடியாது என நினைப்பதும், முயற்சி செய்யாமல் வெற்றி கிடைத்து விடும் என நம்புவதும் முயற்சிக்கு தடையே ஆகும். வெற்றிபெற வேண்டுமெனில் இரண்டு வழிகளை நாம் கடைபிடிக்க வேண்டும்.

1. உடனே செயல்பட வேண்டும்.
2. முயற்சியில் இருந்து ஒருபோதும் பின்வாங்கவே கூடாது.

நாம் ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன்பே மனதினை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அப்போது வெற்றிக்கான பாதையில் பயணிக்க ஆரம்பித்து விடுகிறோம் எனப்பொருள். நீர்நிலைகளை தேடி எப்படி உயிரினங்கள் தாமாக வருகின்றனவோ, அதை போன்று முயற்சி உடையவர்களை வெற்றி தானாக தேடி வரும் என்று ஜப்பானிய அறிஞர் கசோகி கூறுகிறார்.

சிறுமுயற்சிகளில் நாம் பெறுகிற வெற்றியே, பெறும் முயற்சிகளின் வெற்றியை தீர்மானம் செய்கின்றன. முயற்சிக்கு வயதும் தடையில்லை. முயற்சிக்கு முடிவும் கிடையாது. இறையருளின் காலமாகிய இந்த தவக்காலத்தில் நாம் என்னென்ன செய்ய வேண்டும் எனவிரும்புகிறோமோ, அவற்றை முதலில் பட்டியல் இடுவோம். தவக்காலத்தின் 40 நாட்களிலும் நான் இவற்றையெல்லாம் செய்வதற்கு ஆசைப்படுகிறேன் என்பதனை இடையூறுகளும், சோர்வுகளும் நம்மை வாட்டி வதைத்தாலும் முன்னோக்கி செல்வதே எனது இலக்கு என்பதனை நிர்ணயம் செய்து பயணிப்போம். நேர்மறையான பாதையில் நாம் பயணம் செய்கிறோம் என்பதனை வெகுவிரைவில் நம்மால் உணர்ந்திட இயலும்.

அருட்பணியாணர் குருசு கார்மல்,
கோட்டார் மறைமாவட்டம்.

Similar News