ஆன்மிகம்
தெற்கு கள்ளிகுளம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம்

தெற்கு கள்ளிகுளம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம்

Published On 2020-01-10 04:48 GMT   |   Update On 2020-01-10 04:48 GMT
தெற்கு கள்ளிகுளம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தெற்கு கள்ளிகுளத்தில் பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக புனித மிக்கேல் அதிதூதர் சப்பரத்தில் எழுந்தருள ரதவீதியை சுற்றி பவனியாக எடுத்து வரப்பட்டது.

அதைத்தொடர்ந்து புனித அந்தோணியார் உருவம் பொறிக்கப்பட்ட புனித கொடியை ஆலய தர்மகர்த்தா ஜெபஸ்டின் ஆனந்த் ஆலயத்தின் உள்ளே இருந்து எடுத்து வந்தார். அந்த கொடியை தெற்கு கள்ளிகுளம் பங்குத்தந்தை ரூபன் ஜெபம் செய்து அர்ச்சித்தார்.

தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. மறையுரை மற்றும் நற்கருணை ஆசிர்வாதம் நடைபெற்றது. இதில் துரைகுடியிருப்பு பங்குத்தந்தை ஆலிபன், தெற்கு கள்ளிகுளம் பங்குத்தந்தை ஜெரால்ட் ரவி, உதவி பங்குத்தந்தை பால்ரோமன் விஜயன் உள்பட திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News