ஆன்மிகம்
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயம்

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா மார்ச் மாதம் 6, 7-ந் தேதிகளில் நடக்கிறது

Published On 2020-01-08 08:50 IST   |   Update On 2020-01-08 08:50:00 IST
இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடைப்பட்ட நடுக்கடல் பகுதியில் உள்ள கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா வருகிற மார்ச் மாதம் 6, 7-ந்தேதிகளில் நடக்கிறது.
இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடைப்பட்ட நடுக்கடல் பகுதியில் உள்ள கச்சத்தீவு ராமேசுவரம் தீவிலிருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவு பகுதியிலிருந்து 18 கடல் மைல் தொலைவிலும் நடுக்கடலில் அமைந்துள்ளது. இந்த கச்சத்தீவில் புனிதஅந்தோணியார் ஆலயம் ஒன்றும் உள்ளது. இருநாட்டு மக்களும் திரளாக கலந்து கொள்ளும் திருவிழாவானது ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில் இந்த ஆண்டின் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா வருகிற மார்ச் மாதம் 6, 7-ந் தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெறுகிறது.

அந்தோணியார் ஆலய திருவிழா குறித்து இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தில் இருந்து துணை தூதரக அதிகாரி மற்றும் நெடுந்தீவு பங்குதந்தை எமிழிபால் ஆகியோர் ராமேசுவரம் வேர்க்கோடு புனிதசூசையப்பர் ஆலய பங்குதந்தை தேவசகாயத்திற்கு செல்போன் மூலம் பேசி தகவலும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பங்குதந்தை தேவசகாயம் கூறியதாவது:- இந்த ஆண்டின் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா வருகிற மார்ச் 6, 7ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளதாக நெடுந்தீவு பங்கு தந்தை செல்போன் மூலம் பேசி தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இன்னும் ஓரிரு நாளில் திருவிழா குறித்து முறையான அழைப்பிதழ் இ-மெயில் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Similar News