ஆன்மிகம்
கிறிஸ்துவ ஆலயம்

சீயோன் ஆலய 30-வது ஆண்டு பிரதிஷ்டை - அசன பண்டிகை இன்று நடக்கிறது

Published On 2020-03-04 04:42 GMT   |   Update On 2020-03-04 04:42 GMT
பெங்களூரு கே.பி.அக்ரஹாரம் சீயோன் ஆலயத்தில் இன்று 30-வது ஆண்டு பிரதிஷ்டை - அசன பண்டிகை நடக்கிறது.
பெங்களூரு கே.பி.அக்ரஹாரம் நேதாஜி நகரில் பிரசித்திபெற்ற சீயோன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 30-வது ஆண்டு பிரதிஷ்டை, அசன பண்டிகை இன்று(புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது.

இன்று காலை 5.30 மணிக்கு ஆலய பிரதிஷ்டை பண்டிகை நடைபெறுகிறது. இதில் கர்நாடக மத்திய பேராய செயலர் ஜே.பால் தனசேகரன் தேவ செய்தி அளிக்கிறார். இன்னிசையுடன் கூடிய தெய்வீக பாடல்களுடன் ஆராதனை நடக்கிறது. இந்த ஆராதனையில் சீயோன் ஆலய குடும்பத் தினர் கலந்து கொண்டு இறைவனை ஆராதிக்கிறார்கள்.

அதன்பின்னர் மதியம் 12 மணிக்கு ‘அசன விருந்து’ சிறப்பு ஆராதனையுடன் தொடங்கப்பட்டு, அனைவருக்கும் அறுசுவையுடன் விருந்து வழங்கப்படுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை செயலாளர் சாம்ராஜ் தேவசீலன், பொருளாளர் பீட்டர் தங்கதுரை மற்றும் சபை ஆயர் செல்விதாசன், கமிட்டி உறுப்பினர்கள், ஆலய ஆண்கள் ஐக்கியம், பெண்கள் ஐக்கியம், இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் ஐக்கியம், ஓய்வுபெற்ற பாடசாலை குழு, சீயோன் ஆலய குடும்பத்தினர் செய்துள்ளனர்.

விழாவில் அனைத்து பொதுமக்களும் கலந்து கொள்ளுமாறு சீயோன் ஆலய ஆயர் செல்வி தாசன் அழைப்பு விடுத்துள்ளார்.
Tags:    

Similar News