லைவ் அப்டேட்ஸ்: நியூசிலாந்தை பழி தீர்த்தது இந்தியா- 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
50 -வது சத்ததை விளாசினார் விராட் கோலி. இதன்மூலம் சச்சின் சாதனையை விராட் கோலி முறியடித்தார்.
ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் ஒரு சீசனில் அதிக ரன்கள் விளாசிய சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். சச்சின் 673 ரன்கள் எடுத்திருந்தார். இதனை கோலி முறியடித்து விளையாடி வருகிறார்.
இந்தியா - நியூசிலாந்து மோதும் அரையிறுதியை ரசிகராக ஹர்திக் பாண்ட்யா கண்டுக்களித்தார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர்களில் ரிக்கி பாண்டிங்கை முந்தினார் விராட் கோலி. அந்த பட்டியலில் விராட் கோலி 3 -வது இடத்தை பிடித்துள்ளார்.
18426 - சச்சின்
14234 - சங்ககாரா
13705* - விராட் கோலி
13704 - ரிக்கி பாண்டிங்
13430 - ஜெயசூர்யா
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக அரைசதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் சங்ககாராவை முந்தினார் விராட் கோலி. 5-வது இடத்தில் இருந்து 4-வது இடத்தை பிடித்துள்ளார்.
ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் நாக் அவுட் சுற்றில் விராட் கோலி தனது முதல் அரை சதத்தை பதிவு செய்துள்ளார்.
உலகக் கோப்பை அரையிறுதி போட்டி துவங்கும் முன் களத்திற்க்கு வந்த இங்கிலாந்து கால்பந்து வீரரான டேவிட் பெக்கம் மற்றும் சச்சின்.
The Iconic Moment When Two GOATs met in Mumbai.
— cricket (@Cricketupadetes) November 15, 2023
Cricket x Football ❤️#INDvNZ #DavidBeckham #SachinTendulkar #CWC23 pic.twitter.com/Nnf9FdYIJB