கிரிக்கெட்
null

லைவ் அப்டேட்ஸ்: நியூசிலாந்தை பழி தீர்த்தது இந்தியா- 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

Published On 2023-11-15 08:06 GMT   |   Update On 2023-11-15 17:09 GMT
  • உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டிகளில் இந்தியா தோல்வியை சந்திக்கவில்லை.
  • நியூசிலாந்து அணி விளையாடிய 9 போட்டிகளில் 5-ல் வெற்றி பெற்று இருக்கிறது.

உலகக் கோப்பை 2023 தொடரின் அரையிறுதி போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நவம்பர் 19-ம் தேதி நடைபெறும் இறுதி போட்டிக்கு தகுதி பெற முடியும்.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் தோல்வியே சந்திக்காத இந்திய அணி இன்றைய போட்டியிலும் வெற்றிநடையை தொடருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்-ஐ தேர்வு செய்து இருக்கிறது. 

Full View

2023-11-15 17:05 GMT

நியூசிலாந்து அணிக்கு ரிவேஞ்ச் கொடுத்த இந்தியா. 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. முகமது சமியின் அசத்தல் பந்து வீச்சால் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.


2023-11-15 16:58 GMT

கடைசி விக்கெட்டையும் முகமது சமி வீழ்த்தினார். இதன் மூலம் 7 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 

2023-11-15 16:56 GMT

முகமது சமி பந்து வீச்சில் செளதீ 9 ரன்களில் அவுட் ஆனார்.

2023-11-15 16:44 GMT

அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற மிட்செல் 134 ரன்களில் முகமது சமி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

2023-11-15 16:35 GMT

300 ரன்களை குவித்து நியூசிலாந்து அதிரடியாக விளையாடி வருகிறது. மிட்செல் 132 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

2023-11-15 16:34 GMT

குல்தீப் யாதவ் ஓவரில் 2 ரன்னில் சாப்மேன் ஆட்டமிழந்தார்.

2023-11-15 16:32 GMT

அதிரடியாக விளையாடிய பிலிப்ஸ் 41 ரன்களில் பும்ரா பந்து வீச்சில் அவுட் ஆனார்.

2023-11-15 16:10 GMT

நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 250 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

2023-11-15 15:31 GMT

ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை முகமது சமி வீழ்த்தினார். வில்லியம்சன் 69 ரன்னிலும் லாதம் 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

2023-11-15 15:21 GMT

அதிரடியாக விளையாடிய மிட்செல் சதம் அடித்து அசத்தினார்.

Tags:    

Similar News