கிரிக்கெட்

2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

Published On 2023-07-29 18:25 GMT   |   Update On 2023-07-29 18:28 GMT
  • இந்திய அணி 10 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்தது.
  • அதிகபட்சமாக இஷான் கிஷன்- 55 (55), ஷூப்மன் கில்- 34(49) ரன்கள் எடுத்தனர்.

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 3 ஒருநாள் போட்டிகளில் முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரண்டாவது போட்டி இன்று பிரிட்ஜ்டவுன் நகரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்திய அணியில் விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பதில் சஞ்சு சாம்சன், அக்சர் பட்டேல் ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், இந்திய அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது. இதில், துவக்க வீரர்களாக இஷான் கிஷன், ஷுப்மன் கில் களமிறங்கினர்.

இதில், அதிகபட்சமாக இஷான் கிஷன்- 55 (55), ஷூப்மன் கில்- 34(49) ரன்கள் எடுத்தனர்.

தொடர்ந்து, சூர்யகுமாா் யாதவ் 24 ரன்களும், ஷர்துல் தகூர் 16 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 10 ரன்களும், சஞ்சு சாம்சான் 9 ரன்களும், குல்தீப் யாதவ் 8 ரன்களும், ஹர்திக் பாண்டியா 7 ரன்களும், முகேஷ் குமார் 6 ரன்களும், அக்சர் பட்டேல் ஒரு ரன்னும் எடுத்தனர். உம்ரான் மாலிக் ரன் எடுக்காமல் அவுட்டானார்.

இந்நிலையில், 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்தது.

இதன்மூலம், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதைதொடர்ந்து, வெற்றி இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளது.

Tags:    

Similar News