கிரிக்கெட் (Cricket)

டோனியிடம் நெஞ்சில் ஆட்டோகிராப் வாங்கிய சுனில் கவாஸ்கர்.. வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ

Published On 2023-05-15 11:36 IST   |   Update On 2023-05-15 11:36:00 IST
  • சென்னை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
  • சென்னை ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிஎஸ்கே வீரர்கள் மைதானத்தை சுற்றி சிஎஸ்கே கொடியுடன் வலம் வந்தனர்.

சென்னை:

ஐ.பி.எல். தொடரில் 61-வது லீக் போட்டியில் சி.எஸ்.கே. கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டி சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்தது.

இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்னே எடுக்க முடிந்தது. இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 18.3 ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இது சென்னையில் நடக்கும் கடைசி லீக் ஆட்டமாகும். அதனால் போட்டி முடிந்தவுடன் சென்னை ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிஎஸ்கே வீரர்கள் மைதானத்தை சுற்றி சிஎஸ்கே கொடியுடன் வலம் வந்தனர்.


அணியின் கேப்டன் டோனி டென்னிஸ் பந்துகளை ரசிகர்களுக்கு பரிசளிக்கும் விதமாக அவர்களை நோக்கி பந்துகளை வீசினார். மேலும் மீண்டும் சந்திப்போம் என்கிற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகள் மைதானம் முழுவதும் வைக்கப்பட்டிருந்தது.

இவை அனைத்தும் ஒருபுறம் இருக்க இந்த நிகழ்வில் நெகிழ்ச்சியான ஒரு சம்பவம் அரங்கேறியது. இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் மைதானத்தில் வலம் வந்த டோனியிடம் நெஞ்சில் ஆட்டோகிராப் வாங்கினார். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News