null
சச்சின் டெண்டுல்கருக்கு வீடியோ மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த டிரிபிள் ஹெச்
- சச்சின் டெண்டுல்கருக்கு டபிள்யூ.டபிள்யூ.இ. வீரரான டிரிபிள் ஹெச் வீடியோ மூலமாக பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
- கிரிக்கெட் மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உலகெங்கிலும் உள்ள தலைமுறைகளை நீங்கள் ஈர்த்துள்ளீர்கள்.
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கருக்கு இன்று 50-வது பிறந்தநாள். அவரது பிறந்தாளை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் தற்போதைய கிரிக்கெட் வீரர்கள் என அனைவரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
இந்நிலையில் சச்சின் டெண்டுல்கருக்கு புகழ்பெற்ற டபிள்யூ.டபிள்யூ.இ. வீரரான டிரிபிள் ஹெச் வீடியோ மூலமாக பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
சச்சின், மாஸ்டர் பிளாஸ்டர், என் நண்பரே அனைத்து WWE யுனிவர்ஸ் சார்பாக 50-வது பிறந்தநாள் வாழ்த்துக்கள். இது மற்றொரு மைக்கல். கிரிக்கெட் மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உலகெங்கிலும் உள்ள தலைமுறைகளை நீங்கள் ஈர்த்துள்ளீர்கள். நாங்கள் உங்களுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். பிறந்தநாள் வாழ்த்துக்கள் சச்சின்.
என்று அவர் கூறினார்.