கிரிக்கெட் (Cricket)

உலகக் கோப்பை அரையிறுதியில் 5-வது முறை தோல்வி.. தென்னாப்பிரிக்காவின் சோக வரலாறு

Published On 2023-11-17 11:39 IST   |   Update On 2023-11-17 11:39:00 IST
  • உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்க அணி இறுதிப்போட்டியை ஒரு முறை கூட எட்டியதில்லை.
  • அந்த அணி அரைஇறுதியோடு நடையை கட்டுவது இது 5-வது முறையாகும்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. முதல் அரையிறுதியில் நியூசிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதேபோல் நேற்று நடந்த 2-வது அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. வரும் 19-ந் தேதி நடக்கும் இறுதிபோட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது.

இந்நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்க அணி இறுதிப்போட்டியை ஒரு முறை கூட எட்டியதில்லை. அந்த பரிதாபம் இந்த முறையும் தொடருகிறது. அந்த அணி அரைஇறுதியோடு நடையை கட்டுவது இது 5-வது முறையாகும். ஏற்கனவே 1992-ம் ஆண்டில் இங்கிலாந்திடமும், 2007-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவிடமும், 2015-ம் ஆண்டில் நியூசிலாந்திடமும் அரைஇறுதியில் தோற்று இருந்தது. 

1999-ம் ஆண்டு அரைஇறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டம் டையில் முடிந்தாலும் சூப்பர்6 சுற்று ரன்ரேட்டில் பின்தங்கியதன் அடிப்படையில் தென்ஆப்பிரிக்கா வெளியேற்றப்பட்டதும் நினைவு கூரத்தக்கது.



Tags:    

Similar News