கிரிக்கெட்

கவுசிக் காந்தி - சதுர்வேத்

மதுரை அணியுடன் இன்று மோதல்- முதல் வெற்றி ஆர்வத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

Update: 2022-06-25 04:52 GMT
  • டி.என்.பி.எல் போட்டியின் 3-வது நாளான இன்று நெல்லை சங்கர்நகர் மைதானத்தில் 2 ஆட்டங்கள் நடக்கிறது.
  • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதல் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி ‘டை’ செய்து சூப்பர் ஓவரில் தோற்றது.

நெல்லை:

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என்.பி.எல் போட்டியின் 6-வது சீசன் நெல்லையில் நேற்று முன்தினம் தொடங்கியது.

8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி ஜூலை 31ந் தேதி வரை திண்டுக்கல், கோவை, சேலம் ஆகிய இடங்களில் நடக்கிறது.

தொடக்க ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி சூப்பர் ஓவரில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீசை தோற்கடித்தது.

நேற்று நடந்த 2-வது ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தியது.

டி.என்.பி.எல் போட்டியின் 3-வது நாளான இன்று நெல்லை சங்கர்நகர் மைதானத்தில் 2 ஆட்டங்கள் நடக்கிறது.

இன்று மாலை 3.15 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-சதுர்வேத் தலைமையிலான சீசம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

3 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதல் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி 'டை' செய்து சூப்பர் ஓவரில் தோற்றது. இதனால் இன்றைய போட்டியில் மதுரை அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் கேப்டன் கவுசிக் காந்தி, ஜெகதீசன், சோனு யாதவ், ஹரீஷ்குமார், சசிதேவ், அலெக்ஸ்சாண்டர் உள்ளிட்ட சிறந்த வீரர்கள் உள்ளனர்.

மதுரை அணி தனது முதல் ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கையில் இருக்கிறது. அந்த அணியில் அருண் கார்த்திக் உள்ளிட்ட சிறந்த வீரர்கள் உள்ளனர்.

இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் முருகன் அஸ்வின் தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ்-பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

முன்னாள் சாம்பியனான மதுரை அணி முதல் போட்டியிலேேய வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கையில் உள்ளது. முருகன் அஸ்வின், விஜய் சங்கர் உள்ளிட்ட வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.

நெல்லை ராயல் கிங்ஸ் தொடர்ந்து 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் உள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசை தோற்கடித்து இருந்தது.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் இந்த போட்டிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 

Tags:    

Similar News