கிரிக்கெட்

சசி தேவ் - மதுரை அணி வீரர்கள்

null

சரிவில் இருந்து மீட்ட ஹரிஷ் குமார், சசி தேவ்- மதுரை அணிக்கு 136 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

Published On 2022-06-25 11:44 GMT   |   Update On 2022-06-25 13:23 GMT
  • சிறப்பாக ஆடிய சசி தேவ் அரை சதம் அடித்தார்.
  • மதுரை அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி, கிரண் ஆகாஷ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

நெல்லை:

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-சீசம் மதுரை பாந்தர்ஸ் அணி மோதுகிறது. இதில் டாஸ் வென்ற மதுரை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கவுசிக் காந்தி- ஜெகதீஷன் களமிறங்கினர்.

ஆரம்பமே சேப்பாக் அணிக்கு அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் கவுசிக் காந்தி 1, ஜெகதீஷன் 1 என அடுத்தடுத்து வெளியேறினர். அடுத்து வந்த சுஜய் 11, சோனு யாதவ் 9, ராஜகோபால் சதிஷ் 4, ஸ்ரீனிவாஸ் 0, மணிமாறன் சித்தார்த் 2 என சொற்ப ரன்னில் விக்கெட்டுகளை இழந்தனர்.

51 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தவித்த நிலையில் சேப்பாக் அணியின் ஸ்கோர் 100 ரன்னை தாண்டுமா? என சந்தேகம் எழுந்தது. அப்போது ஆல் ரவுண்டர் ஹரிஷ் குமாருடன் சசி தேவ் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

சிறப்பாக ஆடிய சசி தேவ் அரை சதம் அடித்தார். இதில் 6 பவுண்டரிகளும் 2 சிக்சரும் அடங்கும். நிதானமாக ஆடிய ஹரிஷ் குமார் தனது பங்குக்கு அவ்வபோது சிக்சர்களையும் பறக்க விட்டார். கடைசி ஓவரில் சசி தேவ் அவுட் ஆனார். அவர் 58 ரன்கள் விளாசினார். ஹரிஷ் குமார் 39 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனால் 20 ஓவர் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தனர். 

மதுரை அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி, கிரண் ஆகாஷ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்குகிறது.

Tags:    

Similar News