கிரிக்கெட்

இலங்கை கேப்டன் சமாரி அதபத்து

கேப்டன் அதிரடியில் ஆறுதல் வெற்றி பெற்றது இலங்கை பெண்கள் அணி

Published On 2022-06-27 11:33 GMT   |   Update On 2022-06-27 11:33 GMT
  • அதிரடியாக விளையாடிய சமாரி அதபத்து அரை சதம் அடித்து அசத்தினார்.
  • இலங்கை கேப்டன் சமாரி அதபத்து சிறந்த வீராங்கனை விருதை தட்டி சென்றார்.

இலங்கை-இந்தியா பெண்கள் அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக கேப்டன் கவூர் 39 ரன்கள் எடுத்தார்.

இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணியின் விஷ்மி குணரத்னே முதல் ஓவரில் வெளியேறினார். அடுத்து வந்த மாதவி 13 ரன்னில் வெளியேறினார். இந்நிலையில் கேப்டன் சமாரி அதபத்து- நிலாக்ஷி டி சில்வா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அதிரடியாக விளையாடிய கேப்டன் சமாரி அதபத்து அரை சதம் அடித்து அசத்தினார். நிலாக்ஷி டி சில்வா 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் முறையில் வெளியேறினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சமாரி அதபத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். அவர் 48 பந்தில் 80 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். இதில் 14 பவுண்டரிகளும் 1 சிக்சரும் அடங்கும்.

17 ஓவரில் இலங்கை அணி 141 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இலங்கை கேப்டன் சமாரி அதபத்து சிறந்த வீராங்கனை விருதை தட்டி சென்றார். 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Tags:    

Similar News