கிரிக்கெட்

ஒரே ஓவரில் 24 ரன்கள்- அதிரடி காட்டிய புஜாரா- வைரலாகும் வீடியோ

Update: 2022-08-13 10:58 GMT
  • இதுவரை 5 ஒருநாள் போட்டியில் மட்டுமே புஜாரா விளையாடியுள்ளார்.
  • ஒரே ஒவரில் 22 ரன்கள் அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் விளையாடி வருபவர் புஜாரா. 34 வயதானது இவர் ராகுல் டிராவிட்டுக்கு பிறகு பொறுமையாக விளையாடக்கூடிய வீரர். இவர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் போட்டிகளில் சசெக்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

ஒருநாள் போட்டியில் விளையாடிய இவர் அதிரடியாக விளையாடி சதம் அடித்து அசத்தியுள்ளார். 79 பந்தில் 107 ரன்கள் குவித்துள்ளார். அந்த போட்டியின் 45-வது ஓவரில் 22 ரன்களை குவித்துள்ளார். 50 ரன்களை எடுத்த பிறகு 100 ரன்களை 22 பந்தில் அடித்துள்ளார். ஒரே ஒவரில் 22 ரன்கள் அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

டெஸ்டில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த புஜாரா வெள்ளை பந்து போட்டிகளில் விளையாடுவதில்லை. இவர் கடைசியாக 2014-ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ளார். இதுவரை 5 ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News