கிரிக்கெட்

முதல் 20 ஓவர் போட்டி: இந்தியா-அயர்லாந்து நாளை மோதல்

Update: 2022-06-25 05:05 GMT
  • இந்தியா-அயர்லாந்து அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி டுப்ளினில் நாளை நடக்கிறது.
  • அயர்லாந்து அணி இந்தியாவுக்கு எல்லா வகையிலும் சவால் கொடுத்து விளையாட கடுமையாக போராடும்.

டுப்ளின்:

இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்று பயணம் செய்து இரண்டு 20 ஓவர் போட்டிகளில் விளையாட திட்டமிட்டது.

அதன்படி ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்து சென்றடைந்தது.

இந்தியா-அயர்லாந்து அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி டுப்ளினில் நாளை நடக்கிறது.

கேப்டன் ரோகித் ஷர்மா, விராட் கோலி, ரிஷப்பன்ட், ஸ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இங்கிலாந்தில் விளையாட சென்று விட்டதால் அடுத்த கட்ட வீரர்கள் அயர்லாந்து போட்டியில் விளையாடுகிறார்கள். இதனால் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இந்திய அணியில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா இஷான்கிஷன், சூர்யகுமார் யாதவ், தினேஷ்கார்த்திக், சஞ்சு சாம்சன், புவனேஷ்வர் குமார், சாஹல், அவேஷ் கான் உள்ளிட்ட சிறந்த வீரர்கள் உள்ளனர். வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் இந்திய அணி உள்ளது.

பால்பரீன் தலைமையிலான அயர்லாந்து அணி இந்தியாவுக்கு எல்லா வகையிலும் சவால் கொடுத்து விளையாட கடுமையாக போராடும்.

இரு அணிகள் இடையே நடந்த 3 ஆட்டத்திலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது. 2009-ல் நடந்த முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த 2-வது போட்டியில் 76 ரன் வித்தியாசத்திலும், 3-வது ஆட்டத்தில் 143 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

இந்தியா-அயர்லாந்து இடையேயான நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு தொடங்குகிறது. சோனி சிக்ஸ் டெலிவிஷனில் இந்த போட்டி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்தியா: ஹர்த்திக் பாண்ட்யா, இஷான்கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சுசாம்சன், சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர் குமார், அவேஷ்கான், யசுவேந்திர சாஹல், தீபக் ஹூடா, வெங்கடேஷ் அய்யர், அக்‌ஷர் படேல், ஹர்ஷல்படேல், ரவி பிஷ்னாய், ராகுல் திரிபாதி, உம்ரான் மாலிக்.

அயர்லாந்து: பால்பரின் (கேப்டன்), டோகேணி, பால் ஸ்டிர்லிங், ஹேரி டெக்டர், டெக்சர், கிரேக் யங், மெக்கார்த்தி, மார்க் ஆதர், கேம்ப்பெரி, டெலனே, டாக்ரெல், ஜோஸ் லிட்டில், மெக்பிரின், ஆல்ப்ஹெர்ட். 

Tags:    

Similar News