கிரிக்கெட் (Cricket)

அயர்லாந்து அணியின் முன்னாள் கேப்டன் வில்லியம் போர்ட்டர்ஃபீல்ட்

அயர்லாந்து ஜாம்பவான் வில்லியம் போர்ட்டர்ஃபீல்ட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

Published On 2022-06-17 13:26 IST   |   Update On 2022-06-17 13:26:00 IST
  • போர்ட்டர்ஃபீல்ட் 2 உலகக்கோப்பை மற்றும் ஐந்து டி20 உலகக்கோப்பை போட்டிகளில் அயர்லாந்து அணியின் கேப்டனாக பணியாற்றியுள்ளார்.
  • 2011-ல் பெங்களூரில் நடந்த 50 ஓவர் போட்டியில் இங்கிலாந்து அணியை அயர்லாந்து அணி வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

அயர்லாந்து அணியின் முன்னாள் கேப்டன் வில்லியம் போர்ட்டர்ஃபீல்ட் தனது 16 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து விடை பெறுவதாக அறிவித்துள்ளார்.

இவர் அயர்லாந்து அணியில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளார். 148 ஒருநாள் போட்டியில் விளையாடி 11 சதமும் 20 அரை சதமும் அடித்துள்ளார். மேலும் 61 டி20 போட்டிகளில் 3 அரை சதம் உள்பட 1079 ரன்கள் குவித்துள்ளார்.

போர்ட்டர்ஃபீல்ட் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகியதையடுத்து ஒரு வீரராக அணிக்காக விளையாடினார். அவர், கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வேக்கு எதிராக அரை சதம் அடித்தார்.

போர்ட்டர்ஃபீல்ட் 2 உலகக்கோப்பை மற்றும் ஐந்து டி20 உலகக்கோப்பை போட்டிகளில் அயர்லாந்து அணியின் கேப்டனாக பணியாற்றியுள்ளார். குறிப்பாக 2011-ல் பெங்களூரில் நடந்த 50 ஓவர் போட்டியில் இங்கிலாந்து அணியை அயர்லாந்து அணி வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஓய்வு குறித்து அவர் கூறியதாவது:- கடந்த 16 ஆண்டுகளாக எனது நாட்டுக்காக விளையாடியது ஒரு பாக்கியம். இது நான் சிறுவயதில் இருந்தே செய்ய விரும்பிய ஒன்று. ஆனால் ஓய்வுபெறும் முடிவை எடுத்ததால், தற்போது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. ஆனால் 2006-ல் இருந்து விளையாடும் பாக்கியம் எனக்கு கிடைத்தது நம்பமுடியாத பயணமாகும்.

இவ்வாறு போர்ட்டர்ஃபீல்ட் கூறினார்.

Tags:    

Similar News