கிரிக்கெட்

கடைசி டி20: இலங்கைக்கு 139 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது இந்திய பெண்கள் அணி

Update: 2022-06-27 10:12 GMT
  • 21 பந்துகள் சந்தித்த மந்தனா 22 ரன்னில் அவுட் ஆனார்.
  • இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த கவூர் 39 ரன்கள் எடுத்திருந்தார்.

இலங்கை-இந்திய பெண்கள் அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி ஸ்மிரிதி மந்தனா-ஷஃபாலி வர்மா களமிறங்கினர்.

முதல் ஓவரிலேயே ஷஃபாலி வர்மா தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த மேகனா-ஸ்மிரிதி மந்தனாவுடன் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினார். 21 பந்துகள் சந்தித்த மந்தனா 22 ரன்னில் அவுட் ஆனார். அவர் அவுட் ஆன சிறுதி நேரத்தில் மேகனா வெளியேறினார்.

இந்திய அணி 51 ரன்னில் 3 விக்கெட்டை பறிகொடுத்திருந்தது. இந்த நிலையில் கேப்டனுடன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி சேர்ந்து ரன் வேகத்தை அதிகரித்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 33 ரன்னில் அவுட் ஆனார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த கவூர் 39 ரன்கள் எடுத்திருந்தார். இதில் 3 பவுண்டரி 1 சிக்சர் அடங்கும்.

20 ஓவர் முடிவில் இந்திய பெண்கள் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது. 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி விளையாடி வருகிறது.

Tags:    

Similar News