கிரிக்கெட்

எம்எஸ் டோனி- ஜாஸ் பட்லர் 

null

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி சாதனையை முறியடித்த ஜாஸ் பட்லர்

Published On 2022-06-24 08:34 GMT   |   Update On 2022-06-24 08:35 GMT
  • நெதர்லாந்து அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் பட்லர் 86 ரன்கள் குவித்தார்.
  • நெதர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 19 சிக்சர்களை பட்லர் அடித்துள்ளார்.

நெதர்லாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. இதில் இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் நெதர்லாந்து அணியை ஒயிட்வாஷ் செய்தது.

3-வது ஒருநாள் போட்டியில் நெதர்லாந்து அணி 244 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 30.1 ஓவரில் 248 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் ஜாஸ் பட்லர் 86 ரன்கள் எடுத்தார். இதில் 5 சிக்சர் அடங்கும்.

கடைசி போட்டியில் 5 சிக்சர்கள் அடித்ததன் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் டோனியின் சாதனையை ஜாஸ் பட்லர் முறியடித்துள்ளார். ஒருநாள் தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை பட்லர் படைத்துள்ளார்.

நெதர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 19 சிக்சர்களை அடித்ததன் மூலம் பட்லர் முதல் இடத்தை பிடித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி விக்கெட் கீப்பர்கள் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார். டோனி 2005-ல் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் 17 சிக்சர் அடித்தார். டோனியை தொடர்ந்து 2015-ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் 16 சிக்சர்களை ஏபி டி வில்லியர்ஸ் அடித்துள்ளார்.

Tags:    

Similar News