கிரிக்கெட்

உலக பேட்மிண்டன் போட்டி: கடினமான பிரிவில் பி.வி.சிந்து

Published On 2022-08-11 06:34 GMT   |   Update On 2022-08-11 06:34 GMT
  • நேரடியாக 2-வது சுற்றில் களம் காணும் பிவி சிந்து ஆசிய விளையாட்டு சாம்பியனான வாங் ஸி யியை (சீனா) எதிர்கொள்கிறார்.
  • மற்றொரு இந்திய வீராங்கனை சாய்னா நேவால், முதல் சுற்றில் செங் நிகனுடன் (ஹாங்காங்) மோதுகிறார்.

டோக்கியோ:

27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 22-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர், வீராங்கனைகளின் மோதல் அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி முன்னாள் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து கடினமான பிரிவில் இடம் பெற்றுள்ளார்.

நேரடியாக 2-வது சுற்றில் களம் காணும் அவர் ஆசிய விளையாட்டு சாம்பியனான வாங் ஸி யியை (சீனா) எதிர்கொள்கிறார். இந்த தடையை சிந்து கடந்தால் 3-வது சுற்றில் சூப்பர் பார்மில் உள்ள அன் சி- யங்குடன் (தென்கொரியா) மோத வேண்டி வரலாம். அன் சி- யங்குக்கு எதிராக இதுவரை ஆடியுள்ள 5 ஆட்டங்களிலும் சிந்து தோல்வி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு இந்திய வீராங்கனை சாய்னா நேவால், முதல் சுற்றில் செங் நிகனுடன் (ஹாங்காங்) மோதுகிறார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த். நிகாத் நிகயேனையும் (அயர்லாந்து) லக்‌ஷயா சென், டென்மார்க்கின் விட்டிங்ஹசையும் , எச்.எஸ்.பிரனாய், ஆஸ்திரியாவின் லுகா விராபெர்ரையும், சாய் பிரனீத், சோவ் டைன் சென்னையும் (சீனதைபே) முதல் சுற்றில் சந்திக்கிறார்கள்.

Tags:    

Similar News