டி20 உலகக்கோப்பை: இலங்கைக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான்
- டி 20 உலகக்கோப்பை போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
- இலங்கை அணி 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்து வருகிறது.
8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இதில் சூப்பர் 12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
இதன் முடிவில் இரண்டு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்த தொடரில் இன்று (செவ்வாய்கிழமை) ஒரே நாளில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.
காலை 9.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் முகமது நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, தசுன் ஷனகா தலைமையிலான முன்னாள் சாம்பியன் இலங்கையுடன் (குரூப்1) மோதியது.
இந்த ஆட்டத்தில் தோற்கும் அணியின் அரை இறுதி வாய்ப்பு அம்பேல் ஆகிவிடும் என்பதால் இரு அணிகளும் வரிந்து கட்டி நிற்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, இலங்கை அணி 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்து வருகிறது. தற்போது 2.2 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 12 ரன்கள் எடுத்து தொடர்ந்து விளையாடி வருகிறது.