கிரிக்கெட்
null

20 ஓவர் உலக கோப்பை- இந்திய அணி இன்று அமெரிக்கா பயணம்

Published On 2024-05-25 05:31 GMT   |   Update On 2024-05-25 06:13 GMT
  • இந்திய அணி இரண்டு குழுவாக அமெரிக்கா செல்கிறது. ஒரு பகுதி வீரர்கள் இன்று செல்கிறார்கள்.
  • ஐ.பி.எல். இறுதிப்போட்டி முடிந்த பிறகு மற்றொரு குழு செல்கிறது.

9-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடக்கிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்பட 20 நாடுகள் பங்கேற்கின்றன.

'ஏ'பிரிவில் இந்திய அணி இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.

இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை ஜூன் 5-ந்தேதி எதிர் கொள்கிறது. பாகிஸ்தானுடன் 9-ந்தேதியும் அமெரிக்காவுடன் 12-ந்தேதியும் கனடாவுடன் 15-ந்தேதியும் மோதுகிறது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு போட்டிகள் நடக்கிறது.

உலக கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் அமெரிக்கா-கனடா (இந்திய நேரப்படி ஜூன் 2, காலை 6 மணி) மோதுகின்றன.

20 ஓவர் உலக கோப்பை போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி இன்று அமெரிக்கா புறப்பட்டு செல்கிறது.

இந்திய அணி இரண்டு குழுவாக அமெரிக்கா செல்கிறது. ஒரு பகுதி வீரர்கள் இன்று செல்கிறார்கள். ஐ.பி.எல். இறுதிப்போட்டி முடிந்த பிறகு மற்றொரு குழு செல்கிறது.

கேப்டன் ரோகித் சர்மா, துணை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், பும்ரா, ரிஷப்பாண்ட், அர்ஷ்திப் சிங் உள்ளிட்ட வீரர்கள் இன்று நியூயார்க் புறப்பட்டு செல்கிறார்கள்.

சஞ்சு சாம்சன், ஜெய்ஷ் வால், அவேஷ்கான், யசுவேந்திர சாஹல், ரிங்கு சிங், உள்ளிட்டோர் வருகிற 27-ந்தேதி அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார்கள்.

20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள 15 வீரர்கள் விவரம்:-

ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), ஜெய்ஷ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப்பண்ட், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஜடேஜா, அக்சர் படேல், பும்ரா, அர்ஷ்தீப் சிங், சாஹல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.

மாற்று வீரர்களாக சுப்மன்கில், ரிங்குசிங், கலீல் அகமது, அவேஷ் கான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News