கிரிக்கெட்

மகளிர் பிரீமியர் லீக்: ஆர்சிபி அணியின் கேப்டனை அறிவித்த விராட் கோலி- பாப் டு பிளசிஸ்

Published On 2023-02-18 09:00 GMT   |   Update On 2023-02-18 09:00 GMT
  • ஸ்மிருதி மந்தனா இந்திய அணிக்கு 11 டி20 ஆட்டங்களில் கேப்டனாக செயல்பட்டுள்ளார்.
  • மகளிர் பிரீமியர் ஏலத்தில் இந்திய வீராங்கனை மந்தனா அதிகபட்ச ஏலத்தொகைக்கு தேர்வானார்.

மகளிர் பிரீமியர் லீக் போட்டிக்கான வீராங்கனைகளைத் தேர்வு செய்யும் ஏலம் மும்பையில் நடைபெற்றது. 30 வெளிநாட்டு வீராங்கனைகள் உள்பட 87 பேர் ஏலம் எடுக்கப்பட்டனர். இந்த தொடர் மார்ச் 4-ந் தேதி தொடங்கி 26 வரை நடைபெறுகிறது.

மகளிர் பிரீமியர் ஏலத்தில் இந்திய வீராங்கனை மந்தனா அதிகபட்ச ஏலத்தொகைக்கு தேர்வானார். அவரை ரூ.3.4 கோடிக்கு ஆர்சிபி அணி விலைக்கு வாங்கியது.

இந்நிலையில் ஆர்சிபி அணியின் கேப்டனாக மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார். இதனை ஆர்சிபி ஆடவர் அணியின் கேப்டன் பாப் டு பிளசிஸ் மற்றும் விராட் கோலி இந்த தகவலை வீடியோ மூலமாக தெரிவித்துள்ளார்கள்.


இந்திய அணிக்கு 11 டி20 ஆட்டங்களில் கேப்டனாக செயல்பட்ட மந்தனாவுக்கு 6 போட்டிகளில் வெற்றி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News